Kareena Kapoor: சீதையாக நடிக்க பெரும் தொகை கேட்ட கரீனா கபூர்!

கரீனா கபூர்

பொதுவாக ஆறிலிருந்து எட்டு கோடிகள் சம்பளம் வாங்குகிறவர், 12 கோடி என்றதும் தயாரிப்பு தரப்பின் கண்ணில் பட்டர்பிளைகள் பட படத்திருக்கின்றன.

  • Share this:
    பாகுபலிக்குப் பிறகு இதிகாசங்களை திரைப்படமாக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. பிரமாண்டம், சாகஸம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க இதிகாசங்கள் சிறந்த தேர்வு. மேலும், கதைக்காக மூளையை கசக்க வேண்டியதில்லை.

    மோகன்லால் நடிப்பில் ஆயிரம் கோடியில் மகாபாரதத்தை எடுப்பதாக சொன்னார்கள். இதுபோல் பல்வேறு படங்கள் அறிவிப்புடனும், தயாரிப்புடனும் முன்னோக்கி நகர்கின்றன. இயக்குனர் தேசாய்க்கு, சீதையின் பார்வையில் ராமாயணத்தை எடுத்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது. படத்தின் பெயரே சீதா தான். சீதையாக நடிக்க கரீனா கபூரை அணுகியிருக்கிறார்கள். திருமணம், குழந்தை என சினிமாவிலிருந்து ஒதுங்கி, அவ்வப்போது கௌரவ விருந்தாளி போலத்தான் சினிமாவில் தலைகாட்டுகிறார் கரீனா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவர் சீதையாக நடிக்க 12 கோடிகள் கேட்டுள்ளார். பொதுவாக ஆறிலிருந்து எட்டு கோடிகள் சம்பளம் வாங்குகிறவர், 12 கோடி என்றதும் தயாரிப்பு தரப்பின் கண்ணில் பட்டர்பிளைகள் பட படத்திருக்கின்றன. இவ்வளவு காஸ்ட்லியான சீதை வேண்டாம் என்று வேறு நடிகைகளை அலசிக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கில் வெளியான ராமராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா சீதையாக நடித்திருந்தார். சீதைக்கு பொருத்தமான தேர்வு. ஆனால், அவர்கள் இந்தி முகமாக தேடுகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: