ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

செல்ஃபி எடுக்க தோள் மீது கை வைத்த ரசிகர்... மிரண்டுபோன கரீனா கபூர்

செல்ஃபி எடுக்க தோள் மீது கை வைத்த ரசிகர்... மிரண்டுபோன கரீனா கபூர்

கரீனா கபூர்

கரீனா கபூர்

ஒரு ரசிகர் செல்ஃபி எடுப்பதற்காக அவரது தோளில் கை வைத்த போது, ஒரு கணம் பயந்துபோனார் நடிகை கரீனா கபூர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  செல்ஃபிக்காக தோளில் கை வைத்த ரசிகரால் மிரண்டு போயுள்ளார் பாலிவுட் நடிகை கரீனா கபூர்.

  நடிகை கரீனா கபூர் தனது ஒரு வயது மகன் ஜஹாங்கிர் அலி கான் மற்றும் அவரது உதவியாள் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். இருப்பினும், அவர் நுழைவு வாயிலை நோக்கிச் சென்றபோது, ​​அவருடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் குழு கரீனாவை சூழ்ந்து கொண்டது. இதனால் அவரின் பாதுகாப்புக் குழு ரசிகர்களை அப்புறப்படுத்தி, அவர் நடந்து செல்ல வழி செய்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  30 வருட பந்தம்! க்யூட் அமுல் பேபியாக மணிரத்னம் - ரஹ்மான்! ரசித்து ட்வீட் போட்ட இசைப்புயல்!
   
  View this post on Instagram

   

  A post shared by Viral Bhayani (@viralbhayani)  வாயிலை நோக்கி நடந்த போது கரீனாவை சுற்றி ரசிகர்கள் கூட்டம் கூடியது. ஒரு ரசிகர் செல்ஃபி எடுப்பதற்காக அவரது தோளில் கை வைத்த போது, ஒரு கணம் பயந்துபோனார் நடிகை கரீனா கபூர். ஆனால் அவரது மெய்க்காப்பாளர்கள் சரியான விதத்தில் செயல்பட்டு, அந்த ரசிகரை தடுத்து நிறுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Bollywood, Kareena kapoor