Kareena Kapoor: மீண்டும் ஆண் குழந்தைக்கு தாயான கரீனா கபூர்!

Kareena Kapoor: மீண்டும் ஆண் குழந்தைக்கு தாயான கரீனா கபூர்!

குடும்பத்துடன் கரீனா கபூர்

இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டில் தைமூர் அலி கான் என்ற முதல் குழந்தை பிறந்தது.

  • Share this:
    பாலிவுட் நட்சத்திர தம்பதி கரீனா கபூர் - சைஃப் அலி கானுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    நேற்று இரவு மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரீனா கபூர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆகஸ்ட் 2020-ல், கரீனாவும் சைஃப் அலி கானும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தாங்கள் இருவரும் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறோம் என்று அறிவித்திருந்தனர். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டில் தைமூர் அலி கான் என்ற முதல் குழந்தை பிறந்தது.

    Gautham Menon: ’ரஜினி மற்றும் விஜய்க்கு என்னிடம் கதைகள் உள்ளன’ – கெளதம் மேனன்!

    தங்களது இரண்டாவது குழந்தையின் வருகைக்கு முன்னதாக, சைஃப் அலிகானும் கரீனாவும் ஒரு பெரிய வீட்டிற்கு சென்றனர். அதில் ஒரு நூலகம், அழகான மொட்டை மாடி, ஒரு நீச்சல் குளம், புதிதாகப் பிறந்தவருக்கும் தைமூர் அலிகானுக்குமான சிறப்பு நர்சரி உள்ளிட்டவைகள் இருக்கின்றன.

    இரண்டாவது முறை கர்ப்பம் தரித்திருந்த கரீனா கபூர், தனது தொழில்முறை கடமைகளுக்காக தீவிரமாக பணியாற்றினார். அமீர்கான் நடித்த ‘லால் சிங் சத்தா’ படத்தில் தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடிக்க டெல்லி சென்றிருந்தார். பூட்டுதலுக்கு மத்தியில் கரீனா பல விளம்பரங்களில் நடித்தார்.

    கரண் ஜோஹரின் படமான ‘தக்த்’ படத்தில் கரீனா காணப்படுவார், இது தவிர அவர் தனது அடுத்தப் படத்தை இன்னும் அறிவிக்கவில்லை. மறுபுறம், சைஃப் அலிகான் ‘ஆதிபுருஷ்’, ‘பூட் போலீஸ்’ மற்றும் ‘பண்டி அவுர் பாப்லி 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: