கர்நாடகாவில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் பங்கேற்று பிரபல நடிகை வைஷ்ணவி 99 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது மதிப்பெண்களின் பட்டியலை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 625 மதிப்பெண்களுக்கு வைஷ்ணவி 619 மதிப்பெண்களை அவர் எடுத்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதிப்பெண்ணின் ஸ்க்ரீன் ஷாட்டை பதிவிட்டு வைஷ்ணவி கூறியிருப்பதாவது-
இதையும் படிங்க - விலை உயர்ந்த வாட்ச் பரிசு… யுவன் சங்கர் ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கார்த்தி
நான் எழுதிய தேர்வின் ரிசல்ட் வந்து விட்டது. நான் மிக மிக மகிழ்ச்சியாக உள்ளேன். 99.04 சதவீத மதிப்பெண்களை நான் பெற்றிருக்கிறேன்.
அம்மா, அப்பா, தாத்தா, பாட்டிக்கு நன்றி. எனது பள்ளி ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் நடிப்பதற்கும், படிப்பதற்கு இவர்கள் உறுதுணையாக இருந்தார்கள். நான் பங்கேற்றுள்ள ஜீ நிறுவனத்திற்கும் நன்றி. உங்களது ஆதரவு இல்லாமல் நான் இவற்றை செய்திருக்க முடியாது.
இதையும் படிங்க - விஷால் நடிக்கும் ‘லத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!
குறிப்பாக எனது இன்ஸ்டாகிராம் குடும்பத்திற்கு நன்றி. தேர்வு காரணமாக இன்ஸ்டாகிராமில் என்னால் பதிவுகளை இட முடிவில்லை.
இருப்பினும் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் எனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்சுக்கு நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ரியலிட்டி ஷோக்களில் பங்கேற்று மக்கள் மத்தியில் நன்கு அறியப்படும் நடிகையாக மகதி வைஷ்ணவி உள்ளார்.
நடிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் அவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 99 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருப்பது வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.