Home /News /entertainment /

நயன்தாரா பெரிய நடிகையா? சர்ச்சைக்குள்ளாகும் பாலிவுட் பிரபலத்தின் கருத்து

நயன்தாரா பெரிய நடிகையா? சர்ச்சைக்குள்ளாகும் பாலிவுட் பிரபலத்தின் கருத்து

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா என்ற படம் இந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக்காகியுள்ளது.

    காபி வித் கரண் நிகழ்ச்சியில் நயன்தாரா நம்பர் 1 நடிகையா என கரண் ஜோஹர் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும், 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் சமீபத்தில் நடிகை சமந்தாவும், நடிகர் அக்‌ஷய்குமாரும் கலந்துக் கொண்டனர். அந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சமந்தாவிடம், ‘தென்னிந்திய சினிமாவில் யார் முன்னணி நடிகை?’ என நினைக்கிறீர்கள்? என்று கேட்டார் கரண் ஜோஹர்.

    அதற்கு நயன்தாராவின் பெயரை குறிப்பிட்டார் சமந்தா. அதற்கு நாங்கள் நடத்திய கருத்து கணிப்பில் அவரது பெயர் இல்லை என்றார் கரண் ஜோஹர். இது நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையானது. நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா என்ற படம் இந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக்காகியுள்ளது. இதில் ஜான்வி கபூர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படி இருக்கும் போது நயன்தாரா யாரென்று கரண் ஜோஹருக்கு தெரியாதா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

    குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஸ்ருதிகா அர்ஜுன் க்யூட் போட்டோஸ்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதோடு த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா போன்ற திறமையான நடிகைகள் தென்னிந்திய சினிமாவில் இருக்கிறார்கள் என்றும், தென்னகத்து சினிமா மீது கரண் ஜோஹருக்கு எப்போதுமே பொறாமை உண்டு எனவும் தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Nayanthara

    அடுத்த செய்தி