திமுக - காங்கிரஸுக்கு ஆதரவு... விஜய் ரசிகர் மீது நடவடிக்கை!

news18
Updated: April 16, 2019, 12:55 PM IST
திமுக - காங்கிரஸுக்கு ஆதரவு... விஜய் ரசிகர் மீது நடவடிக்கை!
விஜய் மக்கள் இயக்கம் - கன்னியாகுமரி மாவட்டம்
news18
Updated: April 16, 2019, 12:55 PM IST
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளர் சபின் தலைமையில் விஜய் ரசிகர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் ஜோஸ் பிரபு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமையிலிருந்தோ நடிகர் விஜயிடமிருந்தோ குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவளிக்க வலியுறுத்தி எங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வரவில்லை. அவரவர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்று தான் தலைமை கூறியுள்ளது. அதேவேளையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியைப் பயன்படுத்துவது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி ஆதரவு தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை பாயும்.அந்த வகையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் ஒன்றியப் பொறுப்பில் இருக்கும் சபின் பணம் பெற்றுக் கொண்டு வசந்தகுமாருக்கு ஆதரவளித்ததாக தெரிய வருகிறது. எனவே அவர் மீது புகார் தெரிவித்து தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். விஜய் மக்கள் இயக்கத் தலைமை அவர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றார்.

மேலும் பேசிய அவர், விஜய் படம் ரிலீசாகும் போது கொடுத்த நெருக்கடி மற்றும் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத திமுக அதிமுக ஆகிய இந்த இரு கட்சிகளுக்கும் இந்தத் தேர்தலில் ஆதரவு இல்லை. நாங்கள் தனிப்பட்ட முறையில் நோட்டாவுக்கு வாக்கு செலுத்த உள்ளோம் என்றார்.

'அதிமுகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம்’ - விஜய் ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்

வசூல் நாயகன் விஜய்-யின் வெற்றி ரகசியம்!


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...