இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ரஜினியின் கந்தனுக்கு அரோகரா

ரஜினிகாந்த் பதிவிட்ட ‘கந்தனுக்கு அரோகரா’ ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ரஜினியின் கந்தனுக்கு அரோகரா
ரஜினிகாந்த் | முருகன்
  • Share this:
கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டு, அந்த யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கந்தனுக்கு அரோகரா என்ற ஹேஷ்டேக் உடன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், “ கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்கமுடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

இனிமேலாவது மதத்துவேசமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே! கந்தனுக்கு அரோகரா” என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க: பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்ட ஷாரூக்கானின் சொகுசு பங்களா- காரணம் என்ன தெரியுமா?

ரஜினிகாந்த் பதிவிட்ட சில நிமிடங்களில் ‘கந்தனுக்கு அரோகரா’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading