ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘காந்தரா vs தும்பாட்’ எது சூப்பர் படம்? நெட்டிசன்கள் மோதல்…

‘காந்தரா vs தும்பாட்’ எது சூப்பர் படம்? நெட்டிசன்கள் மோதல்…

தும்பாட் - காந்தாரா

தும்பாட் - காந்தாரா

தும்பாட் சிறந்த என்று நெட்டிசன்கள் கூறி, ட்விட்டரில் #Tumbadd என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துள்ளார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காந்தாரா திரைப்படம் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதை விட தும்பாட் திரைப்படம் சிறந்தது என்று ரசிகர்களில் ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.

கன்னட மொழியில் உருவான காந்தாரா திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இந்தப் படம் 50 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

உலக அளவில் இந்த திரைப்படம் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகக்குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு வசூலை அள்ளி குவித்து வருகிறது.

அதே நேரத்தில் இந்த படம் மிகைப்படுத்த பட்டுள்ளதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

WATCH - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ‘விட்னஸ்’ படத்தின் ட்ரெய்லர்…

அந்த வகையில் 2018 இல் வெளியான தும்பாட் திரைப்படம் காந்தாரா திரைப்படத்தை விட சிறப்பாக உள்ளது என்று நெட்டிசன்கள் கூறி, ட்விட்டரில் #Tumbadd என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துள்ளார்கள்.

பேராசை பெரும் நஷ்டம் என்ற உண்மைக் கருத்தை மையமாகக் கொண்டு, தும்பாட் திரைப்படம் உருவானது.

' isDesktop="true" id="849309" youtubeid="sN75MPxgvX8" category="cinema">

1910 இல் நடக்கும் காட்சிகள் இதில், படமாக்கப்பட்டிருக்கும். பீரியட் ஹாரர் ஜானரில் தும்பாட் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இன்ஸ்டாகிராம் போட்டோஸ்..

இந்த நிலையில் காந்தாரா திரைப்படத்தை விடவும் தும்பாட் திரைப்படம் சிறந்த படம் என்று, நெட்டிசன்கள் ட்விட்டரில் கருத்து கூறி வருகிறார்கள்.

' isDesktop="true" id="849309" youtubeid="fUwMWzdeXyc" category="cinema">

இந்த இரு படங்களும் தற்போது அமேசான் தளத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Kollywood