ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழ்நாட்டில் மட்டும் 100-க்கும் அதிகமான திரையரங்குகள்… வெற்றி நடைபோடும் காந்தாரா…

தமிழ்நாட்டில் மட்டும் 100-க்கும் அதிகமான திரையரங்குகள்… வெற்றி நடைபோடும் காந்தாரா…

காந்தாரா திரைப்படத்தில் ஹீரோ ரிஷப் ஷெட்டி

காந்தாரா திரைப்படத்தில் ஹீரோ ரிஷப் ஷெட்டி

சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ. 350 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கன்னட மொழி படமான காந்தாரா தமிழ் நாட்டில் எதிர்பார்த்திராத அளவுக்கு வசூலை குவித்து வருகிறது. இங்கு மட்டும் 100க்கும் அதிகமான திரையரங்குகளில் காந்தாரா திரையிடப்பட்டு 5ஆவது வாரத்தில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி. நடத்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.

    இதையடுத்து, படத்தை இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காந்தாரா திரைப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் 15-ஆம் தேதி காந்தாரா திரைப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது.

    இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய பிரதமர் மோடி… குவியும் வாழ்த்து

    முதலில் குறைவான தியேட்டர்களில் வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து திரையரங்குகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டன. தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 100-க்கும் அதிகமான தியேட்டர்களில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இன்று 5ஆவது வாரத்தில் காந்தாரா தமிழ் டப்பிங் அடியெடுத்து வைக்கிறது.

    கே.ஜி.எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கு பின்னர் கன்னட மொழி படமான காந்தாராவுக்கு மிகப்பெரும் வரவேற்பு தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதிகளில் கிடைத்துள்ளது.

    நடிகை திவ்யபாரதி லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்!

    தியேட்டர்களில் இன்றளவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் இந்த படத்தின் ஓடிடி வெளியீடு தாமதப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காந்தாரா திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளம் வெளியிடவுள்ளது.

    சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ. 350 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood