ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் காந்தாரா!

ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் காந்தாரா!

காந்தாரா

காந்தாரா

காந்தாரா 2023 ஆஸ்கர் விருதுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இப்போது இரண்டு பிரிவுகளில் நாமினேட் ஆகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா திரைப்படம் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில் அகாடமி விருதுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இதன் மூலம் இத்திரைப்படம் ஆஸ்கார் உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியுடையதாக மாறி, முக்கிய பரிந்துரைகளுக்குள் முன்னேற முடியும். ஹோம்பாலே பிலிம்ஸின் காந்தாரா ஆஸ்கார் விருது பந்தயத்தில் தாமதமாக நுழைந்துள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் ஏற்கனவே இதில் இருக்கும் நிலையில், ரிஷப் ஷெட்டியின் காந்தாரா தற்போது ஆஸ்கர் பயணத்தைத் தொடங்கியுள்ளது. காந்தாரா இறுதி நாமினேஷனில் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா திரைப்படம் 2022-ல் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகும். உலகளவில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் 100 நாட்களை நிறைவு செய்தது.

முன்னணி நடிகருக்கு கதை சொன்னதை உறுதிப்படுத்திய ஹெச்.வினோத்!

காந்தாரா 2023 ஆஸ்கர் விருதுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இப்போது இரண்டு பிரிவுகளில் நாமினேட் ஆகியுள்ளது. "கந்தாரா' 2 ஆஸ்கர் தகுதிகளைப் பெற்றுள்ளதை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்! எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் அனைவரின் ஆதரவுடன் இந்த பயணத்தை பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்" என இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது காந்தாரா படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Oscar Awards