முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஓடிடியில் வெளியான ‘காந்தாரா’ : ‘வராஹ ரூபம்’ பாடல் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

ஓடிடியில் வெளியான ‘காந்தாரா’ : ‘வராஹ ரூபம்’ பாடல் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

நவரசம் - வராக ரூபம்

நவரசம் - வராக ரூபம்

காந்தார திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் இன்று நவம்பர் 24 வெளியாகியுள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

நவரசத்தின் திருட்டு பாடல் பதிப்பை காந்தார திரைப்படத்தில் இருந்து நீக்கி OTT யில் வெளியிட்டு உள்ளது. காந்தார திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் இன்று நவம்பர் 24 வெளியாகியுள்ளது.

காந்தாரா படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல் , ‘வராஹ ரூபம்’ மெகா ஹிட் ஆகியது. இந்த நிலையில் தங்களது நவரசம் என்ற பாடலை காந்தாராவில் காப்பியடித்து வராஹ ரூபம் பாடலை படக்குழுவினர் உருவாக்கியுள்ளதாக கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ் கடந்த மாதம் குற்றம் சாட்டியது . கேரள இசைக்குழுவின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று அமேசான் பிரைம் வீடியோவில் OTT யில் பாடலை நீக்கியதால் நீதி வென்றது என்று சைக் குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ்  சமூக வளைதலத்தில் பதிவு செய்துள்ளது.

கன்னட சினிமாவில் கே.ஜி.எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம்தான் காந்தாரா திரைப்படத்தையும் உருவாக்கியுள்ளது. 

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி. நடத்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியது.

WATCH: ''கலைஞர் கருணாநிதி ஒகே சொன்னார்''.. நினைவுகளை பகிர்ந்த நாசர் - வீடியோ

முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.

top videos

    First published:

    Tags: Kollywood