ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இனி வீட்டிலும் பார்க்கலாம் காந்தாரா.. விரைவில் ஓடிடியில் ரிலீஸ்.. வெளியான தகவல் இதுதான்!

இனி வீட்டிலும் பார்க்கலாம் காந்தாரா.. விரைவில் ஓடிடியில் ரிலீஸ்.. வெளியான தகவல் இதுதான்!

காந்தாரா

காந்தாரா

காந்தாரா திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் கன்னட மொழியில் காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. பான் இந்தியா திரைப் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருந்ததால், காந்தாரா திரைப்படத்தை மற்ற இந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதனடிப்படையில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் காந்தாரா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மெதுவாக பயணத்தை தொடங்கிய காந்தாரா தற்போது வசூல் வேட்டை செய்து வருகிறது.

    காந்தாரா படத்தின் போஸ்டர்

    இந்த படத்தை கே.ஜி.எஃப் முதல் மற்றும் 2-ஆம் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனைத்து முக்கிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளதால் மெல்ல மெல்ல ரசிகர்களிடையே காந்தாரா படம் ரீச்சாகி வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் இயக்குநர் ரிஷப் ஷெட்டியை புகழ்ந்தும், படத்தை பாராட்டியும் எழுதி வருகின்றனர். காந்தாரா படம் ஆஸ்கருக்கு தகுந்தது எனவும், படத்தின் மேக்கிங் கண்டிப்பாக ஆஸ்கர் வாங்கும் என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். ட்விட்டரில் #KantaraForOscars என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

    ''தர்மத்தின் பாதுகாவலர்.. இந்து மதத்தை பாதுகாக்கும் பேரரசு'' கைலாசாவில் இருந்து விருது அறிவித்த நித்தியானந்தா!

    தற்போது வசூலில் கேஜிஎப்பையும் தோற்கடித்த காந்தாரா தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஆஹா ஓஹோவென பாராட்டுகள் இருந்தாலும் சில சர்ச்சையிலும் சிக்கி வருகிறது காந்தாரா படம். தெய்வ வழிபாடு, மலைவாழ் மக்கள் என சில கருத்து முரண்பாடுகளை சிலர் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பாடல் காப்பி அடிக்கப்பட்டதாகவும் காந்தாரா மீது குற்றச்சாட்டை கேரள இசைக்குழு வைத்துள்ளது. இப்படி பாராட்டு சர்ச்சை என பயணித்துக்கொண்டிருக்கும் காந்தாரா விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வரும் நவம்பர் மாதத்தில் காந்தாரா வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

    தொடக்கத்தில் பணம் செலுத்தி படம் பார்க்கும் முறை இருக்குமென்றும் பின்னர் அமேசானில் இலவசமாக சப்ஸ்கிரைபர்கள் பார்க்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாது நீங்கள் அமேசான் சப்ஸ்கிரைப் செய்து இருந்தாலும் குறிப்பிட்ட தொகை கொடுத்துதான் முதலில் பார்க்க வேண்டும். பணம் செலுத்தாமல் பார்க்க வேண்டுமென்றால் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

    தியேட்டர்களில் படத்தை தவறவிட்டவர்கள் ஓடிடி ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த தகவல் தீயாய் பரவி வருகிறது.


    Published by:Murugadoss C
    First published:

    Tags: Amazon Prime