ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சர்ச்சையில் சிக்கிய காந்தாரா.. காப்பி அடிக்கப்பட்டதா பாடல்.? பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பிய தாய்க்குடம் பிரிட்ஜ்!

சர்ச்சையில் சிக்கிய காந்தாரா.. காப்பி அடிக்கப்பட்டதா பாடல்.? பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பிய தாய்க்குடம் பிரிட்ஜ்!

நவரசம் - வராக ரூபம்

நவரசம் - வராக ரூபம்

கர்நாடகாவில் மிக அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை இந்த படம் தற்போது நிகழ்த்தி இருக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  காந்தாரா படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல் ஒன்று, தங்களிடம் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக கேரளாவைச் சேர்ந்த தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

  காந்தாரா திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கேரள இசைக்குழுவின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி. நடத்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.

  இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து, இதனடிப்படையில் இந்தி தெலுங்கு தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காந்தாரா திரைப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

  எடையை குறைத்து ஆளே மாறிப்போன நடிகை ஹன்சிகா.. கலக்கல் தீபாவளி போட்டோஸ்.!

  கர்நாடகாவில் கிடைத்த வரவேற்பை போன்ற மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. கர்நாடகாவில் மிக அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை இந்த படம் தற்போது நிகழ்த்தி இருக்கிறது.

  மஞ்சள் நிற புடவையில் மயக்கும் துஷாரா விஜயன்.. தீபாவளி க்ளிக்ஸ்..!

  காந்தாரா படத்தில் இடம்பெற்ற ‘வராக ரூபம்’ என்ற பாடல் மெகா ஹிட் ஆகியது. இந்த நிலையில் தங்களது நவரசம் என்ற பாடலை காந்தாராவில் காப்பியடித்து வராகரூபம் பாடலை படக்குழுவினர் உருவாக்கியுள்ளதாக கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ் குற்றம் சாட்டியுள்ளது.

  ' isDesktop="true" id="824588" youtubeid="gH_RYRwVrVM" category="cinema">

  இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாய்க்குடம் பிரிட்ஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தங்களது நவரசம் பாடலை காப்பி அடித்ததற்காக சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தாய்க்குடம் பிரிட்ஜ் இசை குழு கூறியுள்ளது.

  ' isDesktop="true" id="824588" youtubeid="oYK6JU7Nx38" category="cinema">

  இந்த குற்றச்சாட்டு குறித்து காந்தாரா படக்குழு தரப்பிலிருந்து விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.
   
  View this post on Instagram

   

  A post shared by Thaikkudam Bridge (@thaikkudambridge)  கன்னட சினிமாவில் கே.ஜி.எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தான் காந்தாரா திரைப்படத்தையும் உருவாக்கியுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood