ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மரண மாஸ்.. மிரட்டும் காட்சிகள்! வெளியானது 'காந்தாரா' தமிழ் ட்ரைலர்!

மரண மாஸ்.. மிரட்டும் காட்சிகள்! வெளியானது 'காந்தாரா' தமிழ் ட்ரைலர்!

காந்தாரா

காந்தாரா

கன்னட படமான காந்தாராவில் தமிழ் ட்ரைலர் இன்று வெளியானது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2, மாஸ்டர் பீஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், காந்தாரா என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது.

  கடந்த 30ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், கன்னடத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி, கிஷோர், அச்யூத் குமார், பிரமோத் ஷெட்டி, ஷாலினி குரு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் வெளியாகி பெரிய ஹிட்டைக் கொடுத்து தியேட்டர் எல்லாம் நிரம்பி வழிந்தாலும் காந்தாராவின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மெல்ல மெல்ல சினிமா ரசிகர்கள் காந்தாரா குறித்து பேசவே படத்தின் மீது மக்களின் பார்வையும் விழுந்தது.

  Also Read:  கன்னட சினிமாவின் முகத்தை மாற்றிய மூன்று ஷெட்டிகள்

  எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரும் வெற்றியை காந்தாரா படம் பெற்றிருப்பதால் அதனை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட படத்தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், காந்தாரா படம் இந்தியில் அக்டோபர் 14-ஆம் தேதியும், தெலுங்கு டப்பிங் அக்டோபர் 15ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதேபோன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் காந்தாரா படத்தை டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில் இப்படம் வரும் 15ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் தமிழ் ட்ரைலர் இன்று வெளியானது. ட்ரைலரும் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் நிச்சயம் காந்தாரா தமிழில் பெரிய ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ' isDesktop="true" id="817819" youtubeid="fPgkWwOEWHY" category="cinema">

  இப்படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ளார். இயற்கைக்கும், மனிதனுக்குமான முரண்களை குறித்து இந்தப் படத்தை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். நாட்டாற்றியல் கண்டாராவில் இன்னும் வலுவாக வேரூன்றியுள்ளது. படத்துக்கு அதுதான் தீவிரத்தன்மையை தந்துள்ளது

  Published by:Murugadoss C
  First published: