ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கன்னட படத்தின் வெற்றிக்காக கேக் அனுப்பி வாழ்த்திய சிம்பு! நெகிழ்ந்து போன சாண்டல்வுட்!

கன்னட படத்தின் வெற்றிக்காக கேக் அனுப்பி வாழ்த்திய சிம்பு! நெகிழ்ந்து போன சாண்டல்வுட்!

சிம்பு

சிம்பு

காந்தாரா’ படக்குழுவை பாராட்டி, படத்தின் வெற்றிக்காக வாழ்த்தி நடிகர் சிம்பு சேக் அனுப்பி வைத்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸின் வெளியீடாக கன்னடத்தில் வெளியாகி இருக்கும் ‘காந்தாரா’ படத்தின் வெற்றிக்கு நடிகர் சிம்பு கேக் அனுப்பி வாழ்த்தியுள்ளார்.

  கேஜிஎப் படத்தின் வெற்றிக்கு பிறகு ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. கே.ஜிஎப், கே.ஜி.எப் 2 வெற்றிக்கு பிறகு ஹோம்பலே பிலிம்ஸ் அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.

  சிம்பிளாக வளைக்காப்பு நிகழ்வை முடித்த ரன்பீர் - ஆலியா பட் ஜோடி!

  இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியுள்ளார். பொன்னியின் செல்வனுக்கு பிறகு ரசிகர்கள் ஆவலாகப் பார்க்கும் படமாக காந்தாரா அமைந்துள்ளது. பல்வேறு சினிமா பிரபலங்களும் ‘காந்தாரா’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி வருகின்றனர். தியேட்டர்களில் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து இருப்பதாக விநியோஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ‘காந்தாரா’ படக்குழுவை பாராட்டி, படத்தின் வெற்றிக்காக வாழ்த்தி நடிகர் சிம்பு சேக் அனுப்பி வைத்துள்ளார்.

  ஹோம்பலே பிலிம்ஸின் தயாரிப்பு நிறுவனர் தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு அனுப்பிய கேக்கின் புகைப்படத்தை பகிர்ந்து சிம்புக்கு நன்றியும் கூறியுள்ளார். இதைப்பார்த்த சாண்டல்வுட் ரசிகர்கள் 'we always love simbu' என்று கமெண்ட் செய்து வருகின்றனர். சிம்புவின் உண்மையான அன்பு இதுதான் என அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் இதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Kannada Associations, KGF, Simbu