ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சமூக விளைவுகளை ஏற்படுத்திய காந்தாரா… தெய்வ நர்த்தகர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை அறிவிப்பு…

சமூக விளைவுகளை ஏற்படுத்திய காந்தாரா… தெய்வ நர்த்தகர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை அறிவிப்பு…

காந்தாரா படத்தின் போஸ்டர்

காந்தாரா படத்தின் போஸ்டர்

அரசின் நடவடிக்கையை ரசிகர்கள் பாராட்டியதுடன், இது படத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கன்னடமொழி படமான காந்தாரா வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அப்படத்தில் குறிப்பிடப்பட்ட தெய்வ நர்த்தகர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகையை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

  கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, கடந்த வாரம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகள் வெளிவந்தன. இவையும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.

  கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப். 2 படங்களைத் தொடர்ந்து அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெயரை காந்தாரா பெற்றுள்ளது. இந்த 3 படங்களையுமே ஹோம்பலே பிலிம்ஸ்தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா திரைப்படம், கடலோர கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தையும், அப்பகுதியின் மனித-இயற்கை மோதல் மற்றும் கர்நாடக மண்ணின் பூர்வீக கலாசாரம் உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

  தேவயானி மேடம் குழந்தை மாதிரி.. மேடை ஏறி ரகசியம் சொன்ன எஸ்.ஜே சூர்யா!

  காந்தாரா திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் வசூலைக் குவிப்பது மட்டுமல்லாமல், அதன் சொந்த மாநிலமான கர்நாடகாவில் கலாச்சார மற்றும் சமூக-அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காந்தாராவில் தெய்வ நர்த்தகர்கள் பிரச்னை பேசப்பட்ட நிலையில், கர்நாடகாவில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நர்த்தகர்களுக்கும் மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகையை மாநில அரசு அறிவித்தது.

  இந்த நடவடிக்கையை ரசிகர்கள் பாராட்டியதுடன், இது படத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளனர். தற்போது வரை காந்தாரா திரைப்படம் உலகளவில் ரூ. 170 கோடி வசூலை தாண்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood