ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வசூல் சூறாவளியாய் மாறிய ‘காந்தாரா’… பொன்னியின் செல்வன், விக்ரம் சாதனைகள் முறியடிப்பு!

வசூல் சூறாவளியாய் மாறிய ‘காந்தாரா’… பொன்னியின் செல்வன், விக்ரம் சாதனைகள் முறியடிப்பு!

விக்ரம் – பொன்னியின் செல்வன்- காந்தாரா

விக்ரம் – பொன்னியின் செல்வன்- காந்தாரா

தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி பிரின்ஸ், சர்தார் படங்கள் திரைக்கு வந்தன. அந்த நேரத்தில் குறைவான திரையரங்குகளில் காந்தாரா படம் திரையிடப்பட்டிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    காந்தாரா படத்தின் வசூல் பொன்னியின் செல்வன், விக்ரம் படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியிருக்கிறது. அதுபற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

    கன்னட மொழியில் உருவான காந்தாரா திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கே.ஜி.எஃப். படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் காந்தாரா படத்தை தயாரித்துள்ளது. இதனை ரிஷப் ஷெட்டி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மற்ற மொழிகளில் இதனை டப்பிங் செய்து வெளியிட்டார்கள். தமிழில் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    சூப்பரான தமிழ் வெப் சீரிஸ்! இதோ மிஸ் பண்ணக் கூடாத 10 சீரிஸ்களின் லிஸ்ட்!

    இந்நிலையில் காந்தாராவின் தெலுங்கு டப்பிங் வெர்ஷன் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. இதனால் படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனமே சற்று ஆடிப்போயுள்ளது. தெலுங்கு வெர்ஷனில் மட்டும் இந்த படத்திற்கு ரூ. 45 கோடிக்கும் அதிகமாக கலெக்சன் ஆகியுள்ளது. இது பொன்னியின் செல்வன், விக்ரம் படங்களின் தெலுங்கு வெர்ஷனை விட அதிகமாகும்.

    கர்நாடகத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக காந்தாரா மாறியுள்ளது. அந்த வகையில் கே.ஜி.எஃப். 2 படத்தின் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது.

    ' isDesktop="true" id="827943" youtubeid="fUwMWzdeXyc" category="cinema">

    தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி பிரின்ஸ், சர்தார் படங்கள் திரைக்கு வந்தன. அந்த நேரத்தில் குறைவான திரையரங்குகளில் காந்தாரா படம் திரையிடப்பட்டிருந்தது.

    ஆன்மீகமும்.. இந்து மத தன்மையும்.. பொன்னியின் செல்வன் குறித்து பேசிய கங்கனா!

    பிரின்ஸ் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், காந்தாரா திரையிடப்பட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மட்டும் 100-யை தாண்டியுள்ளது. தற்போது தமிழக திரையரங்குகளில் சர்தார், பொன்னியின் செல்வன், காந்தாரா படங்கள் அதிக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood