ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அம்மாடியோவ்..! வசூலை வாரிக் குவித்த 'காந்தாரா'.. உலகளவில் ₹ 400 கோடி கலெக்‌ஷன்..!

அம்மாடியோவ்..! வசூலை வாரிக் குவித்த 'காந்தாரா'.. உலகளவில் ₹ 400 கோடி கலெக்‌ஷன்..!

கந்தாரா

கந்தாரா

Kantara | சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலை கடந்துள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கன்னட மொழியில் உருவான ‘காந்தாரா’ திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூலை அசால்டாக தாண்டியது.காந்தார வெளியாகி  55ஆவது நாளான இன்று 400 கோடியை கடந்துள்ளது.தற்போது இந்தப் படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி டப்பிங் வெர்ஷன்கள் வசூலை குவிக்கின்றன.

  கந்தாரா உலகளவில் ₹ 400 கோடியை கடந்துள்ளது:

  கர்நாடகா: ₹ 168.50 கோடி

  ஆந்திரா தெலுங்கானா: ₹ 60 கோடி

  தமிழ்நாடு: ₹ 12.70 கோடி

  கேரளா: ₹ 19.20 கோடி

  வெளிநாடு: ₹ 44.50 கோடி

  வட இந்தியா: ₹ 96 கோடி

  மொத்தம்: ₹ 400.90 கோடி

  நடிகர் ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் கன்னட மொழியில் காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

  பான் இந்தியா திரைப் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருந்ததால், காந்தாரா திரைப்படத்தை மற்ற இந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதனடிப்படையில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் காந்தாரா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

  முதலில் குறைவான தியேட்டர்களில் வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து திரையரங்குகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டன.

  "நான் கதைகளை எழுதுவதில்லை ; திருடுகிறேன்"- பாகுபலி எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத்!

  சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலை கடந்துள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் நவம்பர் 24ஆம் தேதி (நாளை) வெளியாகவுள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Kollywood