கன்னட மொழியில் உருவான ‘காந்தாரா’ திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. தற்போது இந்தப் படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி டப்பிங் வெர்ஷன்கள் வசூலை குவிக்க ஆரம்பித்துள்ளன.
ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் கன்னட மொழியில் காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. பான் இந்தியா திரைப் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருந்ததால், காந்தாரா திரைப்படத்தை மற்ற இந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.
இதனடிப்படையில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் காந்தாரா திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை கே.ஜி.எஃப் முதல் மற்றும் 2-ஆம் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
ஹன்சிகாவுக்கு திருமணம்?! தயாராகும் ஜெய்பூர் அரண்மனை! தீயாய் பரவும் தகவல்கள்!
ஐ.எம்.டி.பி. படங்களின் ரேட்டிங்கில் இந்திய அளவில் காந்தாரா திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்திற்கு 9.5 புள்ளிகளை ரசிகர்கள் அளித்துள்ளனர். 8.9 புள்ளிகளுடன் ஜெய்பீம் இரண்டாவது இடத்திலும், 8.4 புள்ளிகளுடன் கேஜிஎப் 2 படம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
#Kantara is getting raving response from the audience 🔥🔥 Thank you all :) #காந்தாரா @shetty_rishab @VKiragandur @hombalefilms @prabhu_sr @gowda_sapthami @AJANEESHB #ArvindKashyap @actorkishore #KantaraTamil pic.twitter.com/ZA1RDX4SeD
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 16, 2022
தமிழகத்தில் காந்தாரா படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் நேற்று காந்தாரா படத்தின் தமிழ் டப்பிங் வெர்ஷன் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் காந்தார திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலும் கன்னட மொழி வெர்ஷனுக்கு கிடைத்ததாகும்.
தீபாவளி ரிலீஸ்! தொடங்கியது புக்கிங்! சர்தார்,பிரின்ஸ் படங்களுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!
தற்போது தெலுங்கு மற்றும் இந்தி மொழி வட்டாரங்களில் காந்தாரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழிலும் இந்த படத்திற்கு வரவேற்பு இருப்பதால் தொடர்ந்து இந்தப் படம் வசூலை குவிக்கும் என்று சினிமா வர்த்தக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kollywood