ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கேஜிஎப் வசூலையே தூக்கிச் சாப்பிட்ட காந்தாரா.. நிற்காமல் சீறும் கலெக்‌ஷன்!

கேஜிஎப் வசூலையே தூக்கிச் சாப்பிட்ட காந்தாரா.. நிற்காமல் சீறும் கலெக்‌ஷன்!

கேஜிஎப் -காந்தாரா

கேஜிஎப் -காந்தாரா

வசூலில் சாதனை படைத்த கேஜிஎப்பையே காந்தாரா தூக்கிச் சாப்பிட்டுள்ளது காந்தாரா

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சாண்டல்வுட் என அழைக்கப்படும் கன்னட சினிமாக்களில் தொடர்ந்து படங்கள் வந்தாலும் பெரிய அளவில் பேசப்படாது. உள்ளூருக்குள்ளேயே படம் ஓடி அடங்கிவிடும். ஆனால் இன்று கன்னட சினிமாவின் முகமே வேறு. அவ்வப்போது மாஸ் படத்தை கொடுத்து உலகம் முழுவதும் சாண்டல்வுட்டை நிலைநிறுத்திவிட்டனர் கர்நாடக சினிமாத்துறையினர். இப்படியான மாஸ் வெற்றிகளுக்கு அச்சாரமாய் இருந்தது கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான கேஜிஎப் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழகத்தின் முக்கிய சிட்டிகளில் ஒன்று அல்லது இரண்டு காட்சிகள் ஓடியது. இந்தப்படத்தை வாங்கி வெளியிட்டார் விஷால். தன்னுடைய நண்பன் என கேஜிஎப் ஹீரோவையும் மேடைகளில் அறிமுக செய்தார். நாட்கள் ஓட ஓட கேஜிஎப் பேச்சு சோஷியல் மீடியாக்களில் பேசப்பட்டன.

  படம் பட்டித்தொட்டி எங்கும் பரவ டயலாக்கும், மாஸும், அம்மா செண்டிமெண்ட் என கேஜிஎல் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. பின்னர் தியேட்டர்களில் கூட்டம் வழிந்தது. முதல் பாகம் முடிந்துபோக எப்போதுதான் இரண்டாம் பாகம் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். பின்னர் வெளியான கேஜிஎப் இரண்டாம் பாகமும் ரசிகர்களை கவர்ந்தது. நாயகன் யஷ் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத நாயகன் பட்டியிலில் இடம்பெற்றார்.

  Also read... தீபாவளிக்கு அதிக வெள்ளி விழா படங்கள் தந்த கமல்ஹாசன் - எந்தெந்த படம் தெரியுமா?

  இப்படி கன்னட சினிமாவின் முகத்தையே மாற்றி சாண்டல்வுட்டை உலகுக்கு அறிமுகம் செய்த பெருமை கேஜிஎப்க்கு உண்டு. இப்படியாக பல சாதனைகளை செய்த கேஜிஎப்பையே தூக்கி சாப்பிடத்தொடங்கியுள்ளது காந்தாரா. கேஜிஎப் படத்தை தயாரித்த அதே தயாரிப்பு நிறுவனம்தான் காந்தாராவையும் தயாரித்துள்ளது.

  காந்தாரா படத்தின் போஸ்டர்

  கடந்த 30ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், கன்னடத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி, கிஷோர், அச்யூத் குமார், பிரமோத் ஷெட்டி, ஷாலினி குரு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பான் இந்தியா திரைப் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருந்ததால், காந்தாரா திரைப்படத்தை மற்ற இந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதனடிப்படையில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் காந்தாரா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அனைத்து முக்கிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளதால் மெல்ல மெல்ல ரசிகர்களிடையே காந்தாரா படம் ரீச்சாகி வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் இயக்குநர் ரிஷப் ஷெட்டியை புகழ்ந்தும், படத்தை பாராட்டியும் எழுதி வருகின்றனர். இந்நிலையில் காந்தாரா படம் ஆஸ்கருக்கு தகுந்தது எனவும், படத்தின் மேக்கிங் கண்டிப்பாக ஆஸ்கர் வாங்கும் என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். ட்விட்டரில் #KantaraForOscars என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்

  சர்ச்சையில் சிக்கிய காந்தாரா.. காப்பி அடிக்கப்பட்டதா பாடல்.? பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பிய தாய்க்குடம் பிரிட்ஜ்!

  இந்த நிலையில் வசூலில் சாதனை படைத்த கேஜிஎப்பையே காந்தாரா தூக்கிச் சாப்பிட்டுள்ளது. தீபாவளி வீக்கெண்ட் என்பதால் வசூலில் ஒரு பிடிபிடித்துள்ளது காந்தாரா.இந்தியாவிம் மட்டும் 170 கோடி ரூபாயைத் தாண்டிய காந்தாரா, உலகளவில் சேர்த்து விரைவில் ரூ.200 கோடி வசூல் லிஸ்டில் இடம்பிடிக்கவுள்ளது. இது கேஜிஎப் வசூல் வேகத்தை விட வேகமானது.


  Published by:Murugadoss C
  First published:

  Tags: KGF