ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற காந்தாரா இயக்குனர் ரிஷப் ஷெட்டி

ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற காந்தாரா இயக்குனர் ரிஷப் ஷெட்டி

இயக்குனர் ரிஷாப் ஷெட்டி -ரஜினிகாந்த்

இயக்குனர் ரிஷாப் ஷெட்டி -ரஜினிகாந்த்

ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற காந்தாரா இயக்குனர் ரிஷாப் ஷெட்டி.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கன்னடத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள காந்தாரா திரைப்படத்தின் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

  நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி. நடத்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.

  இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து, இதனடிப்படையில் இந்தி தெலுங்கு தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காந்தாரா திரைப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. 200 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்துள்ளது.

  மூன்று நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் காந்தாரா படத்தை பாராட்டி இருந்தார். அதில்,தெரிந்தவர்களை விட தெரியாதவர்கள்தான் அதிகம்’ இந்த விஷயத்தை சினிமாவில் காந்தாராவை விட வேறு யாரும் அழகாக காட்டவில்லை. எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகராக ரிஷப் உங்களுக்கு வாழ்த்துகள். இந்திய சினிமாவில் இந்த தலைசிறந்த படைப்பைக் கொடுத்த ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், குழுவினருக்கும் வாழ்த்துகள்’’ எனக் குறிப்பிட்டார். அதற்கு காந்தாரா இயக்குனர் ரிஷாப் ஷெட்டி பதில் ட்வீட் செய்து இருந்தார்.

  இந்நிலையில்,  இயக்குனர் ரிஷாப் ஷெட்டி ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்,

  "ஒரு முறை எங்களைப் புகழ்ந்தால், நூறு முறை உங்களைப் புகழ்வோம். நன்றி ரஜினிகாந்த் சார் , எங்களின் காந்தாரப் படத்தைப் பற்றிய உங்கள் பாராட்டுக்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என பதிவு செய்துள்ளார்.

  காந்தாரா படம் ஆஸ்கருக்கு தகுந்தது எனவும், படத்தின் மேக்கிங் கண்டிப்பாக ஆஸ்கர் வாங்கும் என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். ட்விட்டரில் #KantaraForOscars என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Rajinikanth