முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தாதாசாகேப் பால்கே விருது

காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தாதாசாகேப் பால்கே விருது

ரிஷப் ஷெட்டி

ரிஷப் ஷெட்டி

சமீபத்தில் ரிஷப் ஷெட்டி , கேஜிஎஃப் பட நடிகர் யஷ் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மிகக் குறைந்த செலவில் உருவான கன்னடத் திரைப்படமான காந்தாரா கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகலில் வெளியாகி எல்லா இடங்களிலும் வசூல் சாதனை படைத்தது.

ஓவர் நைட்டில் இந்திய அளவில் பிரபலமானார் ரிஷப் ஷெட்டி. இதனையடுத்து காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவிருப்பதாகவும் பல ஆண்டுகளுக்கு முன் தெய்வத்தின் பின்னணி குறித்து அதில் சொல்லப்படும் என்றும் ரிஷப் ஷெட்டி தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் ரிஷப் ஷெட்டி , கேஜிஎஃப் பட நடிகர் யஷ் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா 2023-ல் மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் என்ற விருது ரிஷப் ஷெட்டிக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விழா வருகிற 20 ஆம் தேதி மும்பையில் நடைபெறவிருக்கிறது.

First published: