துல்கர் சல்மான் - கௌதம் மேனன் நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ட்ரெய்லர் வீடியோ!

ரீத்து வர்மா, துல்கருக்கு ஜோடியாக நடிக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் ரக்‌ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

news18
Updated: July 28, 2019, 7:06 PM IST
துல்கர் சல்மான் - கௌதம் மேனன் நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ட்ரெய்லர் வீடியோ!
துல்கர் சல்மானுடன் ரீத்து வர்மா
news18
Updated: July 28, 2019, 7:06 PM IST
துல்கர் சல்மானின் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் "வாயை மூடி பேசவும்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த ஓகே கண்மணி அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

அதைத் தொடர்ந்து தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. துல்கர் சல்மானின் 25-வது படமான இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கியுள்ளார். ரீத்து வர்மா, துல்கருக்கு ஜோடியாக நடிக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் ரக்‌ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


வயாகாம் 18 ஸ்டுடியோஸ், ஏ.ஜே.ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரை துல்கர் சல்மானின் பிறந்தநாளான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.காதல், ஆக்‌ஷன் கலந்த வசனங்களுடன் வெளியாகியிருக்கும் ட்ரெய்லரில் கௌதம் மேனன் வில்லனாக தோன்றியுள்ளார்.

Loading...

First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...