முதல்முறையாக ஒரு ஆம்பளயோட நடிச்சிருக்கேன்- வரலட்சுமியை கேலி செய்த விமல்!

யோகிபாபு, ரோபோ சங்கர், காளிவெங்கட் ஆகியோருடன் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. அதனால படம் ரொம்ப ஜாலியாக இருக்கும்.

news18
Updated: August 13, 2019, 7:01 PM IST
முதல்முறையாக ஒரு ஆம்பளயோட நடிச்சிருக்கேன்- வரலட்சுமியை கேலி செய்த விமல்!
நடிகர் விமல் | வரலட்சுமி சரத்குமார்
news18
Updated: August 13, 2019, 7:01 PM IST
முதல்முறையாக ஒரு ஆம்பளயுடன் நடித்திருக்கிறேன் என்று கூறி நடிகை வரலட்சுமியை கிண்டலடித்துள்ளார் நடிகர் விமல்.

விமல் நடிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கன்னி ராசி’. படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குநர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விமல் பேசும்போது, ‘இந்தப்படம் மிக அருமையாக வந்திருக்கிறது. யோகிபாபு, ரோபோ சங்கர், காளிவெங்கட் ஆகியோருடன் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. அதனால படம் ரொம்ப ஜாலியாக இருக்கும். இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களோடு தான் இருப்பார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக கல்யாணம் செய்துவிடுவார்.

மேலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறேன். பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில் முதல்முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன்” என்று வரலட்சுமியை பற்றி கலகலப்பாக கூறினார்.

வீடியோ பார்க்க: ரஜினியின் அரசியல் தர்பார்

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...