Home /News /entertainment /

திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து கண்ணீர் சிந்த லிரிக்கல் வீடியோ வெளியானது… தந்தைகளுக்கு சமர்ப்பணம் என தனுஷ் ட்வீட்

திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து கண்ணீர் சிந்த லிரிக்கல் வீடியோ வெளியானது… தந்தைகளுக்கு சமர்ப்பணம் என தனுஷ் ட்வீட்

தனுஷ் - பிரகாஷ் ராஜ்

தனுஷ் - பிரகாஷ் ராஜ்

கடந்த சில மாதங்களாக ஆக்சன் ஜேனரில் வெளிவந்த படங்கள் மட்டுமே அதிக வசூலை குவித்தன. அந்த ட்ரெண்டை திருச்சிற்றம்பலம் மாற்றியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து கண்ணீர் சிந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    தனுஷ், நித்யா மேனன், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

    தனுஷ் படங்களிலேயே இந்தப் படம் அதிக வசூலை குவிக்கும் என்று சினிமா வர்த்தக வல்லுனர்கள் கணித்துள்ளனர். இந்தப் படம் கடந்த மாதம் 18-ம்தேதி வெளியான நிலையில், இதற்கு பின்னர் திரைக்கு வந்த படங்கள் ரசிகர்களின் விருப்பத்தை பெற தவறிவிட்டன.

    படத்தில் இடம்பெற்ற தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா ஆகியோரின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

    கடந்த சில மாதங்களாக ஆக்சன் ஜேனரில் வெளிவந்த படங்கள் மட்டுமே அதிக வசூலை குவித்தன. அந்த ட்ரெண்டை திருச்சிற்றம்பலம் மாற்றியது.

    அதர்வா நடிக்கும் ட்ரிக்கர் படத்தின் ட்ரெய்லர் வெளியானது…

    ஒரு ஃபீல் குட் படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைப்பது என்பது இதுவே முதல் முறையாகும் என சினிமா வர்த்தக நிபுணர்கள் கருதுகிறார்கள். அனிருத் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை கவர்ந்தது.



    தேன்மொழி, மயக்கமா, மேகம் கருக்காதா பாடல்கள் ரசிர்களின் விருப்பத்தை பெற்றன. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து கண்ணீர் சிந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.



    இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் தனுஷ், தந்தைகளுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் என்று கூறியுள்ளார். தனுஷின் அடுத்த படமான நானே வருவேன் திரைப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. தனுஷ் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது. தெலுங்கில் இதற்கு சார் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி