சாலை விபத்தில் பிரபல இயக்குநரின் 20 வயது மகன் மரணம்

மயூர்

300 சிசி பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

 • Share this:
  பெங்களூருவில் நடந்த சாலை விபத்தில் பிரபல கன்னட மற்றும் துளு இயக்குநர் சூர்யோதயா பெரம்பல்லியின் 20 வயது மகன் மரணமடைந்திருக்கிறார்.

  கன்னடம் மற்றும் துளு மொழி படங்களை இயக்கி வருபவர் சூர்யோதயா பெரம்பல்லி. அவரின் மகன் மயூர். 20 வயதாகும் மயூர் தனது நண்பர் வாங்கிய புது பைக்கில் 13 வயதாகும் தனது பக்கத்து வீட்டு சிறுமியை ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார். தேசிய நெடுங்சாலையில் செல்லும் போது அவருடைய பைக், டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 300 சிசி பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மயூரின் உயிர் பிரிந்திருக்கிறது.

  மயூரின் மரணம் குறித்து அறிந்த கன்னட திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதோடு இயக்குநர் சூர்யோதயாவுக்கு தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். அவர் தயாரித்து, இயக்கிய சூப்பர் ஹிட் துளு படமான 'Deyi Baidethi - Gejjegiri Nandanodu'-க்கு மூன்று மாநில விருதுகள் கிடைத்தது. அதன் பிறகு அவர் இயக்கிய ’சால்ட்’ எனும் கன்னட படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: