இயக்குநரை ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை... போலீசில் கொலை மிரட்டல் புகார்!

இயக்குநரை ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை... போலீசில் கொலை மிரட்டல் புகார்!
இயக்குநர் ஆஞ்சநேயா உடன் விஜயலட்சுமி
  • Share this:
பிரபல கன்னட நடிகை விஜயலட்சுமி தான் காதலித்த இயக்குநரை பெற்றோர் எதிர்ப்புக்கு மத்தியில் கரம் பிடித்துள்ளார்.

கன்னட சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் விஜயலட்சுமி. இவரும் துங்கபத்ரா இயக்குநர் ஆஞ்சநேயாவும் காதல் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். விஜயலட்சுமியின் காதலை அவரது பெற்றோர்கள் எதிர்த்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி தனது காதலர் இயக்குநர் ஆஞ்சநேயாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து கர்நாடகா ராய்ச்சூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனது கணவருடன் புகார் அளித்த நடிகை விஜயலட்சுமி, தனது பெற்றோர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனக்கும் தனது கணவர் ஆஞ்சநேயா குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரினார்.


மேலும் தான் வீட்டில் இருந்த பணம் எதுவும் எடுத்துவரவில்லை என்றும் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு விஜயலட்சுமி விளக்கமளித்துள்ளார். இதையடுத்து விஜயலட்சுமி - ஆஞ்சநேயா தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே விஜயலட்சுமியின் தாயார் மற்றும் அவரது பாட்டி ஆஞ்சநேயா குடும்பத்தினர் மீது மாண்டியா மாவட்ட காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதில், ஆஞ்சநேயா மற்றும் அவரது குடும்பத்தினரால் விஜயலட்சுமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ‘தர்பார்’ படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் - கண்டித்த பிரபல இயக்குநர்!
First published: January 12, 2020, 6:33 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading