போதைப்பொருள் வழக்கில் நடிகை சோனியா அகர்வால் கைது

சோனியா அகர்வால்

சோனியா வீட்டிலிருந்து 40 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

 • Share this:
  போதைப்பொருள் வழக்கில் கன்னட நடிகையும், மாடலுமான சோனியா அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  கன்னட திரையுலகில் போதைப்பொருள் பழக்கம் ரசிகர்களிடம் அதிர்ச்சியைக் கிளப்பியது. இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய 2 பேரையும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

  இந்நிலையில் பெங்களூருவில் கடந்த 12-ந்தேதி போதைப்பொருள் விற்பனையாளரான நைஜீரியாவை சேர்ந்த தாமஸ் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட நடிகையும், மாடலுமான சோனியா அகர்வால் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து, பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள சோனியா அகர்வாலின் வீட்டில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது, சோனியா வீட்டிலிருந்து 40 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த நடிகை சோனியா அகர்வாலும் கைது செய்யப்பட்டார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: