பினாயில் குடித்து நடிகை தற்கொலை முயற்சி

பினாயில் குடித்து நடிகை தற்கொலை முயற்சி

சைத்ரா

நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சைத்ரா கூட்டூர், தனது திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக ஃபினாயில் உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

 • Share this:
  நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சைத்ரா கூட்டூர், தனது திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக ஃபினாயில் உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நடிகையும் முன்னாள் பிக் பாஸ் கன்னட போட்டியாளருமான சைத்ரா, அண்மையில் மண்டியாவைச் சேர்ந்த நாகர்ஜூன் என்ற தொழிலதிபரை மணந்தார். இருப்பினும், கணவரின் குடும்பத்தினர் தங்கள் திருமணத்தை ஏற்க மறுத்ததால், சைத்ரா ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

  இது குறித்து முன்னணி ஆங்கில ஊடகத்தில் பேசிய சைத்ராவின் தந்தை, "சைத்ரா இப்போது ஆபத்தில் இல்லை. கடந்த சில நாட்களாக அவர் நிறைய மன உளைச்சலுக்கு ஆளானார். அவர் விரைவில் குணமடைந்து இயல்பு நிலையை அடைவார் என்று நான் நம்புகிறேன். வாழ்நாள் முழுவதுக்குமான ஒரு பாடத்தை அவர் கற்றுக் கொண்டார், மேலும் இதுபோன்ற அவசர முடிவை மீண்டும் எடுக்க மாட்டார். அவர் தனது எழுத்தில் அதிக கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார். என் மகளின் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்க்கிறேன்" என்றார்.

  மேலும் பேசிய சைத்ராவின் தந்தை, "நாங்கள் இதுவரை நாகர்ஜூனின் தரப்பிலிருந்து எதுவும் கேட்கவில்லை. சிக்கலைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக நேற்று ஏ.சி.பி அலுவலகத்திற்கு நாங்கள் செல்லவிருந்தோம். ஆனால், சைத்ரா இப்படியோரு முடிவை எடுத்ததால், எங்களால் போக முடியவில்லை. அவர் இயல்பு நிலைக்கு வந்தவுடன், சரியான முடிவுகளை எடுப்போம். எல்லாவற்றையும் எதிர்கொள்ள சைத்ரா தயாராக உள்ளார்” என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: