ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார்!

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார்!

சிவராஜ்குமார்

சிவராஜ்குமார்

1940-களில் நடந்ததாகக் கூறப்படும் இந்த ஆக்‌ஷன் படத்தில் 'டாக்டர்' மற்றும் 'டான்' நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும், 'கேப்டன் மில்லர்' படத்திலும் நடிக்கிறார் என்று முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். ஒரு ஊடக உரையாடலில் தான் அந்த படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறிய நிலையில், தயாரிப்பாளர்கள் அவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கேப்டன் மில்லர் படத்தில் அவர் தனுஷின் மூத்த சகோதரனாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை வரவேற்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “லெஜெண்ட் நடிகரும் கருநாட சக்கரவர்த்தியுமான சிவராஜ்குமாரை வரவேற்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தனர்.

1940-களில் நடந்ததாகக் கூறப்படும் இந்த ஆக்‌ஷன் படத்தில் 'டாக்டர்' மற்றும் 'டான்' நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் தனுஷுக்கு மொத்தம் மூன்று தோற்றங்கள் இருக்கும். அவருடன் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் மற்றும் மூர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய படங்கள்!

‘கேப்டன் மில்லர்’ தமிழ், தெலுங்கு, இந்தியில் அடுத்த ஆண்டு நேரத்தில் வெளியாகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor dhanush