ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபல கன்னட நடிகர் சதீஷ் வஜ்ரா படுகொலை... போலீசார் தீவிர விசாரணை

பிரபல கன்னட நடிகர் சதீஷ் வஜ்ரா படுகொலை... போலீசார் தீவிர விசாரணை

நடிகர் சதீஷ் வஜ்ரா

நடிகர் சதீஷ் வஜ்ரா

Satish Vajra : 3 மாதங்களுக்கு முன்புதான் சதீஷின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அதற்கும் இந்த கொலைக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கர்நாடகாவை சேர்ந்த பிரபல நடிகர் சதீஷ் வஜ்ரா கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

பெங்களூரு ஆர்ஆர் நகர் பகுதியில் இந்த கொலைச் நடந்துள்ளது. அவரது உடலை விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள  ஆர்.ஆர். நகர் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 சதீஷ் வஜ்ரா கன்னட திரைப்படமான லவோக்ரி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் சதீஷின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சதீஷ் இன்று கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

விக்ரம் படத்தின் வசூலை மேடையில் ஓபனாக அறிவித்த உதயநிதி ஸ்டாலின் 

நேற்றிரவு சதீஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று வீட்டின் முன்பக்க தாழ்வாரத்தை சுத்தம் செய்யும் போது ரத்தக்கறை படிந்திருப்பதை பார்த்த வீட்டு உரிமையாளர் ஹேமந்த், சிசிடிவி கேமராவை சோதனை செய்துள்ளார்.

இதில், ​நள்ளிரவு 12:30 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. வந்தவர்கள், சதீஷின் பைக்கையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

சிசிடிவியில் சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க - கடந்த 10 ஆண்டுகளில் எந்த பிரச்னையும் இல்லாமல் வெளியிட்ட படம் விக்ரம்.. கமல்ஹாசன் மகிழ்ச்சி

3 மாதங்களுக்கு முன்புதான் சதீஷின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அதற்கும் இந்த கொலைக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

நள்ளிரவில் வீடு புகுந்து 2 நபர்கள் நடிகர் ஒருவரை கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

First published:

Tags: Actor, Crime News