விஸ்வாசம் வெற்றிக்கு முக்கிய காரணம் இதுதான்! - பட விழாவில் பேசிய தயாரிப்பாளர்!

"விஸ்வாசம் ரூ.100 கோடி வசூலித்திருந்தால் அதில் ரூ.50 கோடியை கண்ணான கண்ணே பாடலை கொடுத்ததற்காக டி.இமானுக்கு கொடுக்கலாம்."

news18
Updated: July 27, 2019, 12:36 PM IST
விஸ்வாசம் வெற்றிக்கு முக்கிய காரணம் இதுதான்! - பட விழாவில் பேசிய தயாரிப்பாளர்!
விஸ்வாசம் அஜித்
news18
Updated: July 27, 2019, 12:36 PM IST
விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் டி.இமான் முக்கிய காரணம் என்று பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா கூறியுள்ளார்.

பெண்கள் கபடி போட்டியை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கென்னடி கிளப். இந்தப் படத்தில் இயக்குநர்பாரதிராஜா, சமுத்திரகனி, சசிகுமார், சூரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய பிரபல தயாரிப்பாளர் சிவா, விஸ்வாசம் படம் வெற்றியடைய அப்படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலும், இசையமைப்பாளர் டி.இமானும் முக்கிய காரணம் என்றார்.

மேலும் பேசிய அவர், விஸ்வாசம் ரூ.100 கோடி வசூலித்திருந்தால் அதில் ரூ.50 கோடியை கண்ணான கண்ணே பாடலை கொடுத்ததற்காக டி.இமானுக்கு கொடுக்கலாம். மனதை உருக்கிய பாடல் அது” என்றார்.

Loading...

வீடியோ பார்க்க: நம்பிக்கை நாயகன் அப்துல்கலாம்

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...