ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வழமைகளை உடைக்கும் பாடல்... ஆண்ட்ரியாவின் அனல் மேலே பனித்துளி பாடலை வெளியிட்ட கனிமொழி எம்.பி

வழமைகளை உடைக்கும் பாடல்... ஆண்ட்ரியாவின் அனல் மேலே பனித்துளி பாடலை வெளியிட்ட கனிமொழி எம்.பி

கனிமொழி எம்.பி - ஆண்ட்ரியா

கனிமொழி எம்.பி - ஆண்ட்ரியா

சமீபத்தில் அனல் மேலே பனித்துளி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை ஆண்ட்ரியாவின் ’அனல் மேலே பனித்துளி’ படத்தில் இடம்பெற்றுள்ள ’எது நான் இங்கே’ என்ற பாடலை திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ளார். 

  பிரபல பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா சமீபமாக பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் தற்போது அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

  இந்த படத்தை கெய்சர் ஆனந்த் இயக்க, இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் அனல் மேலே பனித்துளி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ’எது நான் இங்கே’ என்ற பாடலை திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ளார். கவிஞர் உமாதேவி எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஆண்ட்ரியா பாடியுள்ளார்.

  நான் இன்னும் இறக்கவில்லை... நேர்க்காணலில் கண்ணீர் விட்டு அழுத சமந்தா


  ' isDesktop="true" id="832831" youtubeid="_AC04XeZP0g" category="cinema">

  பாடலை வெளியிட்ட கனிமொழி எம்.பி, “பெண்ணை, உடலாக, காட்சிப்பொருளாக , பாரம்பரியப் பெருமையாக, சொத்தாக, வன்முறைகளின் இலக்காக, உயிரற்ற புனிதமாகப் பார்க்கும் இந்த சமூகத்தை, வழமையான எண்ணங்களை, கேள்வி கேட்கும், உடைக்க நினைக்கும் தமிழ் திரைப் பாடல்கள் மிக அரிது. அப்படி வழமைகளை உடைக்கும் உமாதேவி அவர்களின் இந்தப் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Andrea Jeramiah, Director vetrimaran, Kanimozhi