Home /News /entertainment /

த்ரிஷா, நயன்தாரா... ஜெயிக்கப் போவது யாரு?

த்ரிஷா, நயன்தாரா... ஜெயிக்கப் போவது யாரு?

த்ரிஷா - நயன்தாரா

த்ரிஷா - நயன்தாரா

ராங்கி முற்றிலும் வேறு மாதிரி. தயாரித்திருப்பது லைகா, இயக்கியிருப்பது எங்கேயும் எப்போதும் படத்தை எடுத்த சரவணன், படத்தின் கதையை எழுதியிருப்பது சரவணனின் குருவும், இயக்குனருமான ஏ.ஆர்.முருகதாஸ்.

இது நடிகைகளின் காலம். இந்தியாவில் சினிமா அறிமுகமாகிய இந்த ஒன்றேகால் நூற்றாண்டில் நடிகைகளை மையப்படுத்தி இத்தனை படங்கள் வந்ததில்லை. முன்னணி நடிகைகள் ஆளுக்கு நாலு நாயக மையப் படங்களை கைவசம் வைத்திருக்கிறார்கள். ரஜினி, அஜித், விஜய், எல்லாம் ஒரு நேரத்தில் ஒரு படம்தான் நடிக்கிறார்கள். சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று படங்கள். அதர்வா, விக்ரம் பிரபு, ஜீவா என்று வந்தால், அவர்கள் இப்போது நடிக்கிறார்களா என்று கேட்கும்வகையில்தான் நிலைமை இருக்கிறது. அதுவே நடிகைகள் பக்கம் பாருங்கள்.

நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, தாப்ஸி போன்ற முன்னணி நடிகைகள் ஹீரோக்களுடனும் நடிக்கிறார்கள், தனியாக நாயகி மையப் படங்களிலும் நடிக்கின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ், வரலட்சுமி, ரெஜினா என அடுத்தக்கட்ட நடிகைகளை எடுத்துக் கொண்டால், அங்கேயும் பிஸி போர்டு மாட்டியிருக்கிறார்கள். இந்த வருடம் முன்னணி நடிகைகளின் முக்கியமான திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இதில் யார் வெற்றி பெறுவார்கள்?

தலைவி (கங்கனா ரனவத்)

Thalaivi
தலைவி


பிரச்சனையை போர்வையாக்கி தூங்குகிறவர்கள் உண்டு. கங்கனா பிரச்சனை உற்பத்தியாளர். அரசியல் பிரச்சனைகளில் அவசியமில்லாமல் கருத்து சொல்கிறவர். நிற்க. நம் விஷயத்துக்கு வருவோம். ஏ.எல்.விஜய்யின் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்துள்ளார் கங்கனா. பூசிய உடல்வாகைக் கொண்ட ஜெயலலிதாவின் தோற்றத்துக்கு கங்கனாவின் ஒட்டிய கன்னம் பொருத்தமாயில்லை. ஆனால், நடிப்புதானே முக்கியம். கம்பீரமும், தெனாவெட்டும் இயல்பிலேயே கலந்த உடல்மொழி என்பதால் ஜெயலலிதா வேடத்துக்கு கங்கனா கச்சிதமாக பொருந்தியுள்ளதாக படக்குழு தெரிவிக்கிறது. அரவிந்த்சாமி எம்ஜிஆராக நடித்துள்ளார். பெரிய திரையில் வரப்போகும் ஜெயலலிதாவின் முதல் வாழ்க்கை வரலாறு தலைவி. இந்தியா முழுவதுமே படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இரண்டு மாதங்கள் முன்பு வர வேண்டிய படம், ஊரடங்கால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. சுமார் 100 கோடிகளை படத்துக்கு செலவிட்டிருப்பதால், திரையரங்கில் வெளியானால் மட்டுமே போட்ட பணத்தை எடுக்க முடியும் என்பதால், ஓடிடி பக்கம் போகாமல் திரையரங்குகள் முழுமையாக திறக்க காத்திருக்கிறார்கள். ஏ.எல்.விஜய் இதுவரை இயக்கிய ஒரு டஜன் படங்களில் மதராசப்பட்டணம் தவிர்த்து எதுவும் வெற்றியில்லை. அவரது ராசியா இல்லை கங்கனாவின்; ராசியா எது வொர்க் அவுட் ஆகப்போகிறது எனப் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெற்றிக்கண் (நயன்தாரா)

Nayanthara Netrikann sold out for 25 crore on OTT platform
நயன்தாரா


கொரியாவில் 2009-ல் வெளியான பிளைன்ட் திரைப்படம் பரவலான வரவேற்பை பெற்றது. போலீஸ் அகாடமியில் பயிற்சி பெறும் நாயகிக்கு ஒரு விபத்தில் கண் பார்வை பறிபோகிறது. அவளது சகோதரனும் அதில் கொல்லப்படுகிறான். அந்த நேரத்தில் தொடர் குற்றச் செயலில் ஈடுபடும் நபரை போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. நாயகி அவனை எப்படி கண் தெரியாத நிலையில் கண்டுபிடிக்கிறாள் என்பது கதை. இந்தக் கதையை தமிழுக்கும், நயன்தாராவுக்கும் ஏற்றபடி மாற்றி நெற்றிக்கண் படத்தை எடுத்திருப்பதாக தகவல். படத்தை தயாரித்திருக்கும் ரவுடி பிக்சர்ஸ் விக்னேஷ் சிவனோ, படத்தை இயக்கியிருக்கும் மிலின்த் ராவ்வோ இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. கதை எதுவாக இருந்தால் என்ன. படம் விற்பனையாகப் போவதும், ரசிகர்கள் படத்தைப் பார்க்கப் போவதும் நயன்தாராவுக்காகதான். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மூக்குத்தி அம்மன் கொரோனா கால ஹிட்களில் ஒன்று. தீபாவளிக்கு அண்ணாத்த வரவிருக்கிறது. அஜ்மல், மணிகண்டன் என வேறு சிலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆர்.டிராஜசேகரின் ஒளிப்பதிவு படத்தின் பிளஸ்களில் ஒன்று. க்ரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைக்க, திலீப் சுப்பாராயன் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். கண்டிப்பா படம் வெற்றி என்று படக்குழு நம்பிக்கையுடன் தொடை தட்டுகிறது.

ராங்கி (த்ரிஷா)முன்னணி நடிகைகளில் நாயகி மையப் படம் இதுவரை வொர்க் அவுட் ஆகாதது த்ரிஷாவுக்கு மட்டுமே. 2016-ல் நாயகி என்ற ஹாரர் படத்தில் நடித்தார். த்ரிஷாதான் நாயகி, நாயகன் எல்லாம். தமிழ், தெலுங்கில் ஆர்ப்பாட்டமாக தொடங்கி, அதே ஆர்ப்பாட்டத்துடன் வெளியிட்டனர். அச்சு அசல் மேடை நாடகம். இரண்டு மொழிகளிலும் பணால். இது முன்பே தெரிந்ததால் படத்தின் புரமோஷன் எதிலும் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. அடுத்து 2018-ல் மோகினி வெளியானது. அதுவும் தோல்வி. மூன்றாவதாக இந்த வருடம் ஓடிடியில் நேரடியாக பரமபதம் விளையாட்டு வெளியானது. ரசிகர்கள் அதையும் கண்டுகொள்ளவில்லை. தேவை ஒரு நாயகி மைய ஹிட் என்ற நிலையில், த்ரிஷாவின் ராங்கி இந்த வருடம் வெளியாகிறது. த்ரிஷாவின் மற்ற படங்களை வைத்து ராங்கியை எடைபோட்டால் ஏமாந்து போவீர்கள். ராங்கி முற்றிலும் வேறு மாதிரி. தயாரித்திருப்பது லைகா, இயக்கியிருப்பது எங்கேயும் எப்போதும் படத்தை எடுத்த சரவணன், படத்தின் கதையை எழுதியிருப்பது சரவணனின் குருவும், இயக்குனருமான ஏ.ஆர்.முருகதாஸ். மாஸ் ஹீரோ பட ரேஞ்சுக்கு எல்லாமே பெரிய தலைகள். இசை சி.சத்யா, ஒளிப்பதிவு சக்தி என தொழில்நுட்ப ஏரியாவும் டபுள் ஸ்ட்ராங்க். த்ரிஷாவின் முதல் நாயகி மைய ஹிட்டாக ராங்கி இருக்கும் என்கிறார்கள். நம்பிக்கைப்படி நடந்தால் மகிழ்ச்சிதான்.

மூன்று பேரை பற்றி சொல்லும் போது ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி சொல்லாமல் விடுவது சரியல்ல. இன்றைய தேதியில் இவர்தான் அதிகப்படங்களை கைவசம் வைத்துள்ளார். அதில் கணிசமானவை நாயகி மையப்படங்கள். ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் என்ற டேக் லைனுடன் தயாராகி வரும் பூமிகா ஒரு நாயகி மையப்படம். தயாரிப்பு கார்த்திக் சுப்பாராஜ். இது தவிர, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா ஆகிய நாயகி மையப் படங்களில் நடிக்கிறார். தி கிரேட் இன்டியன் கிச்சன் மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் இவரே நாயகி. நாலில் இரண்டு தேறினாலும் அடுத்த வருடம் முன்னணி நடிகைகள் பட்டியலில் அழுத்தமான இடம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைக்கும்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actress Trisha, Nayanthara

அடுத்த செய்தி