ஜெயலலிதா பயோபிக்கில் இணைந்த ஹாலிவுட் கலைஞர்!

news18
Updated: September 12, 2019, 7:44 PM IST
ஜெயலலிதா பயோபிக்கில் இணைந்த ஹாலிவுட் கலைஞர்!
ஜெயலலிதா | கங்கணா ரணாவத்
news18
Updated: September 12, 2019, 7:44 PM IST
கேப்டன் மார்வெல் என்ற ஹாலிவுட் படத்தில் ஒப்பனையாளராக பணிபுரிந்த ஜேசன் காலின்ஸ் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை தலைவி என்ற டைட்டிலுடன் உருவாக இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கங்கணா ரணாவத் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளன்று படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் கங்கணா ரணாவத் நான்கு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், இந்த 4 தோற்றத்தை அச்சு அசலாக அப்படியே திரைக்கு கொண்டு வருவதற்காக கேப்டன் மார்வெல் படத்தில் ஒப்பனையாளராக பணிபுரிந்த ஜேசன் காலின்ஸை அழைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் குறித்த காட்சி இடம்பெறுவதால் நடிகை கங்கணா ரணாவத் தற்போது பரதநாட்டியம் கற்று வருவதாக கூறப்படுகிறது. தீபாவளிக்குப் பின் தலைவி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ பார்க்க: விஜய் பாடிய கானா பாடல்கள்!

First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...