• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’தேச பக்தர்களை யாரும் ஒடுக்க முடியாது என்பதை இது உணர்த்துகிறது..’ உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்த கங்கனா ரனாவத்..

’தேச பக்தர்களை யாரும் ஒடுக்க முடியாது என்பதை இது உணர்த்துகிறது..’ உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்த கங்கனா ரனாவத்..

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

‘அமித்ஷா ஜி என்னை சில காலத்திற்குப் பிறகு மும்பைக்கு போகுமாறு சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் இந்தியாவின் மகளுக்கு மதிப்பளித்து பாதுகாப்பு அளித்திருக்கிறார்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

  • Share this:
    தேச பக்தர்களை யாரும் ஒடுக்க முடியாது என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. சிவசேனா தொண்டர்கள் மிரட்டல் விடுத்த விவகாரத்தில் தனக்கு Y+ பாதுகாப்பு அளித்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியிருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத்.

    மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மாறியுள்ளதாக கங்கனா ரனாவத் டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.



    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், அச்சமாக இருந்தால் மும்பைக்கு வர வேண்டாம் என விமர்சித்திருந்தார். அவரது கருத்துக்கு பதிலளித்த கங்கனா, மும்பை என்பது சிவசேனா கட்சி மட்டுமல்ல என காட்டமாக தெரிவித்திருந்தார். சிவசேனா தொண்டர்கள் என்ன மிரட்டல் விடுத்தாலும், 9-ஆம் தேதி நிச்சயம் மும்பைக்கு வருவேன் எனவும் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    இமாச்சல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனாவின் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Y+ பாதுகாப்புக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருக்கும் கங்கனா ரனாவத், ‘அமித்ஷா ஜி என்னை சில காலத்திற்குப் பிறகு மும்பைக்கு போகுமாறு சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் இந்தியாவின் மகளுக்கு மதிப்பளித்து பாதுகாப்பு அளித்திருக்கிறார்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: