ஜெ., வாழ்க்கை வரலாறு சொல்லும் ‘தலைவி’... சீக்ரெட் உடைத்த கங்கனா ரணாவத்

news18
Updated: October 10, 2019, 7:47 PM IST
ஜெ., வாழ்க்கை வரலாறு சொல்லும் ‘தலைவி’... சீக்ரெட் உடைத்த கங்கனா ரணாவத்
ஜெயலலிதா | கங்கணா ரணாவத்
news18
Updated: October 10, 2019, 7:47 PM IST
அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும் அரசியல் படத்தில் மட்டுமே அவ்வாறான கேரக்டரில் நடிப்பேன் எனவும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’ திரைப்படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ள நடிகை கங்கனா ரனாவத் கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஈஷா நர்சரிக்கு இன்று மாலை வந்தார்.


காவிரி கூக்குரல் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த கங்கனா ரணாவத், அதற்கு ரூ.42 லட்சம் நன்கொடையும் வழங்கியிருந்தார். இந்நிலையில், காவேரி கூக்குரல் இயக்க களப்பணியை பார்வையிடுவதற்காகவும், அதில் ஈடுபட்டுள்ள மக்களை ஊக்குவிப்பதற்காகவும், ஈஷா நர்சரிக்கு வருகை தந்திருந்தார். ஈஷா மையத்தில் நடைபெற்று வரும் நர்சரி பணிகளை பார்வையிட்ட அவர், பின்னர் அங்கேயே செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேரக்டரில் தலைவி திரைப்படம் நடிப்பதும் , காவேரி கூக்குரல் இயக்கத்தில் பங்கேற்று இருப்பதும் எனக்கு தமிழ்நாட்டுடன் உறவினை வலுபடுத்தி வருகின்றது. சுயமாக சிந்தித்து செயல்பட்டு தனது வாழ்வை அமைத்து கொண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதா வரலாற்றை படித்த போது என்னைப் போல நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதை தெரிந்து கொண்டேன்.Loading...

அதேபோல் கலைத்துறையில் பல்வேறு இன்னல்களை கடந்து வந்தவர் அவர். ஜெயலலிதா பல்வேறு போராட்டங்களை வாழ்வில் சந்தித்ததை போலவே எனது வாழ்வும் இருக்கின்றது. எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.

‘தலைவி’ திரைப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ் கற்றுக்கொள்ளவும், பரதநாட்டியம் கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன்.

‘தலைவி’ படத்தின் முதல் பாதி ஜெயலலிதாவின் 20 முதல் ,30, 40 வயதுகளில் நடந்தவையாக இருக்கும். இரண்டாவது பாதி அரசியல் சம்மந்தப்பட்டதாக எம்.ஜி.ஆர், கருணாநிதியுடனான தொடர்புகள் , அரசியல் வாழ்க்கை குறித்து இருக்கும்.

பன்முகத் தன்மை கொண்டவராக ஜெயலலிதா இருந்ததை இந்தப் படத்தின் மூலம் என்னால் உணர முடிகிறது. என்னால் முடிந்த அளவு அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறேன்” என்றார்.

வீடியோ பார்க்க: தமிழ் சினிமாவில் நடிக்க தமிழ் கலாசாரத்தை கற்பது முக்கியம்: தமன்னா

First published: October 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...