ஜெ.,கதைக்கும் என் கதைக்கும் ஒற்றுமை இருக்கிறது - கங்கணா ரணாவத் நெகிழ்ச்சி

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் தமிழில் 'தலைவி' என்ற பெயரிலும், இந்தியில் 'ஜெயா' என்ற பெயரிலும் தயாராகிறது.

news18
Updated: March 26, 2019, 8:08 PM IST
ஜெ.,கதைக்கும் என் கதைக்கும் ஒற்றுமை இருக்கிறது - கங்கணா ரணாவத் நெகிழ்ச்சி
கங்கணா ரணாவத்
news18
Updated: March 26, 2019, 8:08 PM IST
ஜெயலலிதாவின் கதையைக் கேட்கும் போது அதற்கும் என்னுடைய கதைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதைப் பார்த்தேன் என்று நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் தமிழில் 'தலைவி' என்ற பெயரிலும், இந்தியில் 'ஜெயா' என்ற பெயரிலும் தயாராகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்தை விப்ரி மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிடம் முறையான தடையில்லாச் சான்றிதழும் பெற்றுள்ளது படக்குழு.

இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடிக்கிறார். பாகுபலி படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இந்தப் படத்துக்கு இணை கதாசிரியராக பணிபுரிகிறார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்தநிலையில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த கங்கணா ரணாவத், “எனக்கு எப்போதுமே மாநில மொழிப்படங்களில் நடிக்க மிகவும் பிடிக்கும். ஆந்திரா, தமிழகத்தில் உள்ள மக்களுக்கும் எனக்கும் ஒரு இணைப்பு இல்லை என்பதால் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். சரியாக இந்த வாய்ப்பு எனக்கு அமைந்திருக்கிறது.நான் எனது சொந்த பயோபிக் எடுக்கும் வேலைகளில் இருந்தேன். ஆனால் ஜெயலலிதாவின் கதையும், எனது கதையும் ஒரேமாதிரியாக இருக்கிறது. அவருடைய கதை என்னுடைய கதையைவிட வெற்றிக் கதை. நான் இந்தப் படத்தின் கதையைக் கேட்கும்போது என் கதைக்கும் அதற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை உணர்ந்தேன். எனவே எனது கதையைச் சொல்லும் படமா அல்லது அவரது கதையைச் சொல்லும் படமா? என்று வரும்போது நான் ஜெயலலிதாவின் கதையைத் தேர்ந்தெடுத்தேன்” என்று கூறியுள்ளார்.

Watch Also: அஜித்...பில்லா முதல் விஸ்வாசம் வரை - வீடியோ
Loading...
First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...