Thalaivi: கங்கனாவின் ‘தலைவி’க்கு யூ சான்றிதழ்!

காங்கனா ரனாவத்

தமிழ் பதிப்புக்கு மதன் கார்க்கியும், இந்திக்கு ரஜத் அரோராவும் வசனம் எழுதியுள்ளனர்.

  • Share this:
    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக்கியுள்ளார் இயக்குநர் ஏ.எல்.விஜய். கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனைவரும் பார்க்கத் தகுந்த யூ சான்றிதழை வழங்கியுள்ளது தணிக்கைக்குழு.

    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பலரும் திரைப்படமாக்க முயன்றனர். கௌதம் வெப் சீரிஸாக எடுத்தார். ஆனால், ஏ.எல்.விஜய்தான் முதல் முதலில் அதனை பிரமாண்டமாக சாதித்திருக்கிறார். தலைவி தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. அரவிந்த்சாமி இதில் எம்ஜிஆராக நடித்துள்ளார்.
    தலைவி படத்துக்கான ஆரம்பக்கட்ட புகைப்படங்கள், தகவல் சேகரிப்பு ஆகியவற்றை மேற்கொண்டவர் அஜயன் பாலா. பிறகு விஜயேந்திர பிரசாத் முதற்கொண்டு பலரும் திரைக்கதையில் பங்களிப்பு செலுத்தினர். தமிழ் பதிப்புக்கு மதன் கார்க்கியும், இந்திக்கு ரஜத் அரோராவும் வசனம் எழுதியுள்ளனர். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங், பிருந்தா பிரசாத் ஆகியோர் தலைவியை தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிரமாண்டமாக தயாராகியிருக்கும் தலைவியை திரையரங்கில் வெளியிடுவதாக இருந்த நேரம் தான் கொரோனா இரண்டாம் அலையில் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் படம் ஓடிடியில் வெளியாகும் என்றனர். தயாரிப்பாளர்கள் அதனை மறுத்தனர். சுமார் 100 கோடிகள் படத்துக்கு செலவிடப்பட்டுள்ளதால், திரையரங்கில் வெளியிட்டால் மட்டுமே போட்ட பணத்தை எடுக்க முடியும் என்ற நிலையில் தயாரிப்பாளர்கள் திரையரங்கில் படத்தை வெளியிடுவது என்பதில் உறுதியாக இருந்தனர்.

    தற்போது கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் படம் சென்சாருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அனைவரும் பார்க்கத் தகுந்த யூ சான்றிதழை சென்சார் போர்ட் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்டில் படத்தை வெளியிடும் வேலையை முடுக்கிவிட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: