நடிகை கங்கனா ரணாவத்தின் நடிப்பில் உருவான தாகட் படம், ஓடிடியில் ரிலீஸாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். பல்வேறு சர்ச்சைக் கருத்துகளை கூறி, எப்போதும் தன்னை பரபரப்பாக வைத்திருப்பதாக இவர் மீது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
குறிப்பாக பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை சமூக வலைதளங்களில் இவர் தெரிவிப்பதன் மூலம் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேரக் கிடைத்து வருகின்றன.
7 மில்லியன் என்றால் சும்மாவா.. செம்ம ஹாப்பியில் விஜய் டிவி மைனா நந்தினி!
தமிழில் இவர் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இதன்பின்னர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் தலைவி என்ற படத்தில் நடித்திருந்தார். ஏ.எல். விஜய் இயக்கிய இந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.
இந்நிலையில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்ததாக கங்கனா ரணாவத் நடிப்பில் தாகத் என்ற படம் கடந்த மாதம் 20ம் தேதி வெளியானது. சுமார் 90 கோடி ரூபாய் பொருட் செலவில் இந்தப் படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது.
Also read... தமிழகத்தில் 115 கோடியை வசூல் செய்த கே.ஜி.எஃப்-2
இதில் கங்கனாவுடன், அர்ஜுன் ராம் பால், திவ்யா தத்தா, சஸ்வதா சாட்டர்ஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் புரொமோஷனுக்காக கங்கனா உள்பட படக்குழுவினர் கடுமையாக உழைத்தனர்.
also read : வேற லெவல் ஹாட் லுக்கில் ஜான்வி கபூர்.. வைரல் போட்டோஸ்
ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதிகபட்சமாக இந்தப் படம் ரூ. 10 கோடி வரையில் தியேட்டர்கள் மூலம் வசூலித்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜூலை 1ம் தேதி தாகட் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.