எப்படி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன் - கங்கனா வெளியிட்ட புகைப்படம்!

கங்கனா ரனவத்

தலைவி படத்துடன் தகாட் படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் கங்கனாவின் பாடி ட்ரான்ஸ்பர்மேஷனுக்காக அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

  • News18
  • Last Updated :
  • Share this:
கங்கனா ரனவத் தலைவி படத்தில் நடித்த புகைப்படத்தையும், இப்போது நடித்துக் கொண்டிருக்கும் தகாட் படத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறைச் சொல்லும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா நடித்துள்ளார். அதற்காக அவர் உடல் எடையை கூட்டியிருந்தார். பாடல் காட்சியொன்றில் ஆளே தெரியாத அளவுக்கு ஊதிப்போயிருந்தார் கங்கனா. 
View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தையும், தற்போது நடித்துவரும் தகாட் படத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தகாட் சர்வதேச உளவாளியைப் பற்றிய படம். கங்கனாதான் உளவாளி, அவர்தான் நாயகன், நாயகி எல்லாம். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்துக்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகியுள்ளார்

Also read... மார்டன் டிரஸ்ஸில் கலக்கும் ’வில்லி காயத்திரி’... ரசிகர்கள் வியப்பு!

தலைவி படத்துடன் தகாட் படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் கங்கனாவின் பாடி ட்ரான்ஸ்பர்மேஷனுக்காக அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்தகாட் படத்தில் கங்கனாவுடன்  அர்ஜுன் ராம்பால், திவ்யா தத்தா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: