Home /News /entertainment /

ஸ்டார் ஹோட்டல் உணவெல்லாம் வேஸ்ட்... தெருவோர கடைகள் தான் பெஸ்ட்! - கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சை

ஸ்டார் ஹோட்டல் உணவெல்லாம் வேஸ்ட்... தெருவோர கடைகள் தான் பெஸ்ட்! - கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சை

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

தனக்கு நட்சத்திர ஓட்டல் உணவுகளை விட, தெருவோரங்களில் விற்கப்படும் உணவின் சுவை தான் பிடிக்கும் என தெரிவித்துள்ளார் கங்கனா ரனாவத்.

    தனக்கு தெருவோர உணவகங்களில் இருக்கும் உணவு தான் மிகவும் பிடிக்கும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளாலும் இணையத்தில் கவனம் ஈர்ப்பார். இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக தலைவி திரைப்படம் வெளியானது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.

    இந்நிலையில் தனக்கு நட்சத்திர ஓட்டல் உணவுகளை விட, தெருவோரங்களில் விற்கப்படும் உணவின் சுவை தான் பிடிக்கும் என தெரிவித்துள்ளார் கங்கனா ரனாவத். இது குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “நட்சத்திர ஓட்டல் உணவுகளின் ருசியை விட எனக்கு தெருவோரங்களில் விற்கப்படும் உணவுகளின் சுவைதான் பிடிக்கும், சாலையோரங்களில் கிடைக்கும் உணவு வகைகளை சாப்பிடும் போட்டி வைத்துக் கொண்டால் நான் முதலில் வருவது நிச்சயம்.

    படப்பிடிப்புக்காக எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே கிடைக்கும் ஊள்ளூர் உணவு வகைகளை பற்றி தெரிந்து கொள்வேன். அவற்றை வாங்கி ருசியை அனுபவித்து சாப்பிடுவேன். டில்லியில் எனக்கு பிடித்தமான சில தெருவோர கடைகள் உள்ளன.

    நிலைமை பிச்சைக்காரரை விட மோசம்... விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய ராகவேந்திரன் புலி

    தனு வெட்ஸ் மானு மற்றும் தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படங்களின் படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்றபோது தினமும் அங்குள்ள தெருவோர கடையில் ருசியான உணவுகளை வாங்கி சாப்பிட்டது மறக்க முடியாத அனுபவம்” என்று தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Kangana Ranaut

    அடுத்த செய்தி