Kangana Ranaut: ’தோல்வியடைந்தவர்களை இந்த உலகம் வாழ விடாது’ - கங்கனா வருத்தம்

கங்கனா

கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை பயமுறுத்துவார்கள். கீழே தள்ளி விடவும் முயற்சிப்பார்கள். தனிமைப்படுத்தவும் செய்வார்கள்.

  • Share this:
    தோல்வி அடைந்தவர்களை இந்த உலகம் வாழ விடாது என நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

    நடிகை கங்கனா ரணாவத் தற்போது தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையப்படுத்திய இப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கடுத்து இந்திரா காந்தி வாழ்க்கை கதையில் கங்கனா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தவிர சமூக வலைதளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் கங்கனா. இதனால் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அவரது ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “தோல்வி அடைந்தவர்களை மக்கள் விட்டு விடுவார்கள். அவர்களை கேவலமாகவும் நடத்துவார்கள். தோல்வி அடைந்தவர்களை உலகம் வாழவும் விடாது. கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை பயமுறுத்துவார்கள். கீழே தள்ளி விடவும் முயற்சிப்பார்கள். தனிமைப்படுத்தவும் செய்வார்கள். வெற்றி பெற்றவர்கள் தனிமையில் தான் இருக்க வேண்டும். அதனால் தான் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் தனித்து இருப்பார்கள் என்று கூறுகின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: