தலைவி படத்திற்கு கிடைத்த செம ரெஸ்பான்ஸ்... "சீதா" அவதாரம் எடுக்கும் கங்கனா!

கங்கனா ரனாவத்

அதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கரீனா பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டார்

 • Share this:
  பலமொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ள 'சீதா அவதாரம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

  தலைவி படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் மிக அருமையான நடித்ததற்கு மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் கங்கனா பெற்றுள்ளார். இந்த நிலையில் கங்கனா ரணாவத் வரவிருக்கும் காவிய படமான ‘சீதா: தி இன்கார்னேஷன்’ என்ற படத்தில் சீதா தேவியின் பாத்திரத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) அன்று அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

  மேலும், கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். கழுகுகள் மற்றும் பாம்புகள் இருந்த படத்தின் போஸ்டரில் சீதா: தி இன்கார்னேஷன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அலாவிக் தேசாய் இயக்குகிறார் மற்றும் திரைக்கதையை எழுத்தாளர் கேவி விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். இவர் 'பாகுபலி', 'மணிகார்னிகா', 'தலைவி' உள்ளிட்ட படங்களின் திரைக்கதையையும் எழுதியவர் ஆவார்.

  மேலும் அந்த பதிவில் கங்கனா கேப்ஷன் செய்திருந்ததாவது, "சீதா அவதாரம்", இந்த தலைசிறந்த கலைஞர்களின் குழுவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். சீதா ராமின் ஆசீர்வாதத்துடன் ... ஜெய் ஸ்ரீராம்," என்று சந்தோஷமாக பதிவிட்டுள்ளார். கங்கனாவின் பதிவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  முன்னதாக, இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க, பாலிவுட்டின் பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் கரீனா கபூரை நடிக்க வைக்க இயக்குனர் அலாவிக் தேசாய் விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் புராண நாடகத்தில் சீதாவாக நடிக்க கரீனா ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்குத் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் பாலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கள் வெளியானது.

  மேலும் அதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கரீனா பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் சீதாவாக கங்கனா ரணாவத் நடிப்பார் என்று படக்குழுவும் உறுதி செய்துள்ளது. அதேபோல படத்தின் இயக்குநரான அலாவுகிக் தேசாய், கங்கனாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "சீதா ஆரம்பமாகிறது. நம்பிக்கையுடன் அர்ப்பணிப்பவர்களுக்கு இந்த உலகம் கண்டிப்பாக உதவும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   
  View this post on Instagram

   

  A post shared by Kangana Thalaivii (@kanganaranaut)


  கானல் நீராக இருந்த ஒரு விஷயம் தற்போது தெளிவாகியிருக்கிறது. இதுவரை சரியாக ஆராயப்படாத தெய்வீகக் கதாபாத்திரத்தைப் பற்றிய கனவு தற்போது நிஜமாகியிருக்கிறது. சீதாவாக நடிக்க கங்கனா ரணாவத்தை ஒப்பந்தம் செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எஸ்.எஸ். ஸ்டுடியோவின் முழு ஆதரவுக்கு மிக்க நன்றி" என்றி ட்வீட் செய்துள்ளார். இந்த படம் தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: