Kangana Ranaut: கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் - கங்கனா ரனாவத் வெளிநாடு செல்வதில் சிக்கல்

கங்கனா

படப்பிடிப்புக்காக புதாபெஸ்ட் செல்வதற்காக தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முயன்றிருக்கிறார் கங்கனா.

  • Share this:
    நடிகை கங்கனா ரனவத் மீது மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்திருப்பதால், கங்கனா வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    நடிகை கங்கனா ரனவத் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வந்தார். ஆளும் பாஜக மோடி அரசை ஆதரிப்பதாகக் கருதி, இரு சமூகங்களுக்கிடையில் சண்டை ஏற்படுத்தும்வகையில் அவரது கருத்துக்கள் இருந்ததால், ட்விட்டர் நிறுவனம் கங்கனா ரனவத்தின் கணக்கை நிரந்தரமாக ரத்து செய்தது. கடந்த அக்டோபர் மாதம் கங்கனா ரனவத் ட்விட்டரில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக மும்பை பாந்த்ரா காவல்நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், படப்பிடிப்புக்காக புதாபெஸ்ட் செல்வதற்காக தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முயன்றிருக்கிறார் கங்கனா. அவர் மற்றும் அவரது சகோதரி மீது வழக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டி, பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி, புதுப்பிக்க இயலாது என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த கங்கனா, அவசர வழக்காக இதனை விசாரிக்க வேண்டும் என தனது வழக்கறிஞர் மூலம் கேட்டிருந்தார்.

    இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், ஒரு படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடம் நடக்கும், ஒரு வாரம் காத்திருப்பதில் எதுவும் நடந்துவிடப் போவதில்லை, அவ்வளவு அவசரம் என்றால் முன்பே தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் என வழக்கு விசாரணையை ஜுன் 25-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். இதனால், இந்த வார இறுதியில் புதாபெஸ்ட் செல்லும் கங்கனா ரனவத்தின் திட்டம் தள்ளிப் போயுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: