Thalaivi: ஜெயலலிதா கதாப்பாத்திரத்திற்கு 20 கிலோ எடை அதிகரித்த கங்கனா - வைரலாகும் படங்கள்!

தலைவி படத்தில் கங்கனா

20 கிலோ எடை அதிகரித்து, பின்னர் சில மாதங்களில் அதை குறைத்து மீண்டும் பழைய வடிவத்துக்கு திரும்பியுள்ளார் கங்கனா.

  • Share this:
    இந்த ஆண்டு வெளியாகும் மிகவும் எதிர்ப்பார்ப்புள்ள படங்களில் ஒன்று கங்கனா ரனாவத் நடிக்கும் ’தலைவி’. இதன் ட்ரைலரை மார்ச் 23-ஆம் தேதி வெளியிட படக்குழு தயாராக உள்ளது. அன்று கங்கனாவின் பிறந்தநாளும் கூட. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கியுள்ளார்.

    இந்தக் கதாப்பாத்திரத்திற்காக கங்கனா நிறைய முயற்சிகளை மேற்கொண்டார். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பது மட்டும் அவருக்கு சவாலாக இருக்கவில்லை. அந்தக் கதாப்பாத்திரத்திற்காக 20 கிலோ எடை அதிகரித்து, பின்னர் சில மாதங்களில் அதை குறைத்து மீண்டும் பழைய வடிவத்துக்கு திரும்பியுள்ளார். தற்போது தலைவி படத்தின் சில படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

    Mumbaikar: மாஸ் லுக்கில் பாலிவுட்டில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி!



    கங்கனா ரனவுத்தின் 34-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் மற்றும் இந்தியில் நாளை 'தலைவி' டிரெய்லர் வெளியிடப்பட உள்ளது. இந்த ட்ரைலர் வெளியீட்டு நிகழ்வு சென்னை மற்றும் மும்பையில் நடைப்பெறுகிறது. அதனால் இது நிச்சயம் கங்கனாவுக்கு பரபரப்பான பிறந்தநாளாக இருக்கும்.

    பொழுதுபோக்கு துறையில் ஜெயலலிதா எதிர்கொண்ட போராட்டங்களையும், பின்னர் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பெண் அரசியல்வாதிகளில் ஒருவராவதற்கு அவர் கடந்து வந்த பாதைகளையும் 'தலைவி' சித்தரிக்கிறது.

    கங்கனா ரனாவத்துடன் இணைந்து அரவிந்த் சாமி, மதுபாலா, பூர்ணா, மற்றும் சமுத்திரகனி ஆகியோரும் தலைவி படத்தில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: