Home /News /entertainment /

காரை மறித்து போராட்டம்.. பெண்களிடம் மன்னிப்பு கேட்ட கங்கனா ரனாவத்

காரை மறித்து போராட்டம்.. பெண்களிடம் மன்னிப்பு கேட்ட கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

விவசாயிகளை காலிஸ்தான்கள் என்று விமர்சித்ததற்காக அவர் மீது வழக்கு பதியப்பெற்றுள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய பெண்களை கொச்சையாக விமர்சித்த கங்கனா ரனாவத்தின் காரை மறித்து பெண்கள் போராட்டம் நடத்தினர். பிறகு அந்தப் பெண்களிடம் மன்னிப்பு கேட்டார் கங்கனா.

மோடி அரசு பதவியேற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளை பொதுவெளியில் பேசுகிறவராக மாறியுள்ளார் கங்கனா ரனாவத். சமீபத்தில் இவர், 1947 இல் பெற்றது வெறும் பிச்சை, 2014 இல் கிடைத்ததுதான் (மோடி ஆட்சியில் அமர்ந்தது) உண்மையான சுதந்திரம் என்று பேசினார். இதுபோல் தேசவிரோத கருத்துக்களை டயரியா போல் பொழிந்து வருகிறார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை காலிஸ்தான்கள் என்று விமர்சித்ததற்காக அவர் மீது வழக்கு பதியப்பெற்றுள்ளது. அதேபோல் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட வயதான பெண்மணியை நூறு ரூபாய்க்காக போராட வந்தவர் என்று கொச்சையாக விமர்சித்தார். சர்ச்சை எழுந்ததும் அந்த பதிவை நீக்கினார். வோளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றதையும் அவர் விமர்சித்திருந்தார்.

also read : நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஜோஜு ஜார்ஜின் புதிய படம்..

இந்நிலையில் தனது குடும்பத்தில் நடந்த நிகழ்வுக்காக பஞ்சாப் மாநிலம் வந்த போது அவரது காரை விவசாயிகள் மறித்தனர். அவர்களில் பெண்களும் இருந்தனர். ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கங்கனா ரனாவத் அந்த பெண்களிடம் பேசினார். விவசாயிகள் மற்றும் பெண் போராட்டக்காரர்களைப் பற்றி தவறாக எதுவும் பேசவில்லை, ஷாஹீன் பாக் போராட்டம் நடத்திய பெண்களையே தான் விமர்சித்ததாக கூறினார். ஆனாலும் போராட்டக்காரர்களிடம் அவர் மன்னிப்பு கேட்ட பின்பே அவரது காரை அங்கிருந்து செல்ல போராட்டக்காரர்கள் அனுமதித்தனர்.
இது குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் கங்கனா ரனாவத், பாதுகாப்பு இல்லாமலிருந்திருந்தால் அடித்தே கொல்லப்பட்டிருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Kangana Ranaut

அடுத்த செய்தி