Home /News /entertainment /

சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து- ஆமீர்கானை சீண்டும் கங்கனா ரணாவத்

சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து- ஆமீர்கானை சீண்டும் கங்கனா ரணாவத்

கங்கனா, ஆமீர் கான்

கங்கனா, ஆமீர் கான்

சமந்தா- நாக சைதன்யா விவகாரத்து தொடர்பாக அமீர்கானை கங்கனா ராணாவத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

  தமிழ்நாட்டின் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து சமந்தா திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும், தெலுங்கில் சாகுந்தலம் படத்திலும் நடிக்கிறார். இதன் பிறகு சற்று பிரேக் எடுத்துக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

  கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்தது. இதற்கிடையில், நாகசைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளிவந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜூலை மாதத்தில் சமூக வலைதளத்தில் அவருடைய பெயரை மாற்றினார். திருமணத்துக்குப் பிறகு கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனியை தனது பெயருடன் இணைத்துக் கொண்டவர், ஜூலை மாதத்தில் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆங்கிலத்தில் 'எஸ்' என்று பெயரை மாற்றினார்.

  சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் பிரிகிறார்கள் என்று ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தன. இருப்பினும், இருவரும் இதுதொடர்பாக மறுப்பு தெரிவிக்காமலே இருந்துவந்தனர். இந்நிலையில் நாகசைதன்யாவும், சமந்தாவும் தாங்கள் பிரிவதாக தத்தம் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளனர்.

  இந்தநிலையில், சமந்தா, நாகசைதன்யா விவகாரத்து தொடர்பாக அமீர்கானையும் சேர்த்து மறைமுகமாக கங்கனா ராணாவத் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ‘எப்போது விவகாரத்து நடைபெற்றாலும் தவறு ஆண்கள் மேல்தான் உள்ளது. என்னுடைய குரல் பழமைவாதமாகவோ அல்லது முன்அனுமானம் செய்துகொண்டதாகவோ இருப்பது போல தெரியலாம். ஆனால், இப்படிதான் கடவுள் ஆணையும், பெண்ணையும் அவர்களது இயல்பையும் பண்புகளையும் வடிவமைத்துள்ளார். முதன்மையாக அறிவியல்பூர்வமாக ஆண் ஒரு வேட்டைக்காரன், அவள் வளர்த்தெடுப்பவர்.

  பெண்களை ஆடை போல எளிதில் மாற்றி பின் அவர்களின் உற்ற நண்பர்களாக இருக்கிறோம் என்று பேசும் ஆண்களிடம் கனிவு காட்டுவதை நிறுத்துங்கள். ஊடகங்களிலிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் ஊக்கம் பெறும் இப்படிப்பட்டவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். அவர்களைப் புகழ்ந்து, பெண்ணின் குணத்தைப் பற்றித் தீர்மானிக்கிறார்கள். விவாகரத்து கலாச்சாரம் முன்னெப்போதையும் விட அதிகமாக வளர்ந்து வருகிறது.

  சமீபத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்த தென்னக நடிகர் ஒருவர் 4 வருடங்களாகத் திருமண வாழ்க்கையிலும், 10 வருடங்களுக்கும் மேலாக அந்தப் பெண்ணுடன் காதலிலும் இருந்துள்ளார். இந்த நடிகர் சமீபத்தில், பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று அறியப்படும் ஒரு உச்ச நட்சத்திரத்தைச் சந்தித்திருக்கிறார். அந்த நட்சத்திரம் பல பெண்களின், குழந்தைகளின் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டுத் தற்போது பலருக்கு வழிகாட்டுபவராகவும், அறிவுரை சொல்பவராகவும் இருக்கிறார்.

  எனவே எல்லாம் எளிதாக முடிந்துவிட்டது. இது கிசுகிசு அல்ல. நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்று நம் அனைவருக்குமே தெரியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published:

  Tags: Aamir Khan, News On Instagram

  அடுத்த செய்தி