ஈஷாவில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கலந்துகொண்டார்.
கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய விழா இன்று அதிகாலை வரை நடந்தது. சத்குரு முன்னிலையில் தியானலிங்கத்தில் பஞ்ச பூத ஆராதனையுடன் விழா தொடங்கியது. இதில் பல முன்னணி பிரமுகர்கள், திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.
லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, சத்குருவின் சத்சங்கம், கண்ணைக் கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி புகழ்பெற்ற இசை கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு ருத்ராட்சங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கலந்துகொண்டார். பக்தர்களுடன் கங்கனா ரனாவத் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது பேசுகையில், “நான் கிருஷ்ணரும் ராமரும் இருந்த காலத்தில் பிறக்கவில்லையே என சில சமயம் யோசித்து இருக்கிறேன். கடவுளுக்கு நன்றி.. ஆனால் நான் அதிர்ஷ்டவசமாக சத்குருவின் காலத்தில் பிறந்திருக்கிறேன். எனக்கு இங்கே வருவது மிகவும் பிடித்திருக்கிறது. ” என்றார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.