கந்துவட்டி கேட்டு ரயில்வே ஊழியர் கடத்தல் - சினிமா நடிகரை வலைவீசி தேடும் போலீஸ்

கந்து வட்டி பிரச்னையில் ரெயில்வே ஊழியரை கடத்தி தாக்கியதாக நடிகர் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கந்துவட்டி கேட்டு ரயில்வே ஊழியர் கடத்தல் - சினிமா நடிகரை வலைவீசி தேடும் போலீஸ்
crime time image
  • Share this:
தமிழ் சினிமாவில் பைனான்சியராகவும், சில படங்களில் துணை நடிகராகவும் நடித்தவர் ஜெரால்டு மில்டன். நடிகர் சங்கர தேர்தலின்போது விஷாலின் பாண்டவர் அணியில் இருந்தவர். மறைந்த நடிகர் அலெக்சின் மருமகன். தற்போது தலைமறைவாகியுள்ளார்.

மறைந்த நடிகர் அலெக்ஸ் ஒரு காலத்தில் திருச்சியல் ரயில்வே ஊழியர்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்துக் கொண்டிருந்தார். பின்னாளில் மேஜிக் கலைஞராக மாறினார். சினிமாவிலும் நடித்து புகழ் பெற்று மறைந்தார். அவரின் மருமகனும் துணை நடிகருமான ஜெரால்டு மில்டன், அலெக்ஸ் போலவே திருச்சியில் ரயில்வே தொழிலாளர்களுக்கு கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வருகிறார்.அரசியல் கட்சியிலும் சேர்ந்து திருச்சி மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்தார்.

2012-ம் ஆண்டு திருவரம்பூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் ஜெரால்டு மில்டன் இடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். வாங்கிய பணத்திற்கு இரு மடங்காக ரூ.25 லட்சம் கேட்டு துன்புறுத்தி மிரட்டியதால் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கிலிருந்து வெளியில் வந்த ஜெரால்டு தொடர்ந்து கந்து வட்டி தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.


இதன்பிறகு விஷால் தலைமயிலான பாண்டவர் அணியில் இணைந்ததுடன், பல சினிமாக்களுக்கு பைனான்ஸ் செய்து வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி கொட்டப்பட்டு ஐஸ்வர்யா நகர் பகுதியை சேர்ந்த 56 வயதான ரயில்வே ஊழியர் ஆறுமுகம் திருச்சி பொன்மலை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கடந்த சனிக்கிழமை வேலை முடித்து வெளியே வந்தபோது 3 பேர் வழிமறித்து இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றுள்ளனர்.

தென்னூர் பகுதியில் கட்டி வைத்து 2019ஆம் ஆண்டு ஜெரால்டிடம் வாங்கிய 35 ஆயிரம் பணத்தைக் கேட்டு அடித்து உதைத்ததாகக் கூறியுள்ளார். வாங்கிய பணத்திற்கான வட்டியை முறையாக கட்டி வந்ததாகவும், கொரோனா பிரச்னையில் சில மாதமகாக வட்டி கட்ட முடியாமல் போனதாக கூறியுள்ளார்.

இதற்காக வட்டிக்குமேல் வட்டி போட்டு 35 ஆயிரம் ரூபாய்க்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்டு அடித்து துன்புறுத்தியதாக புகாரில் ஆறுமுகம் கூறியிருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொன்மலை போலீசார் பாலக்கரை மல்லிகைப்புரத்தை சேர்ந்த நடிகர் ஜெரால்டு, அதே பகுதியில் மரியம் நகரை சேர்ந்த ஜெஸ்டின் ஜெபராஜ் மற்றும் விசு ஆகிய மூன்று பேரை தேடி வந்தனர்.ஜெஸ்டின் ஜெபராஜை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள நடிகர் ஜெரால்டையும், விசுவையும் தேடி வருகின்றனர். கொரோனா காலத்திலும் கந்து வட்டி கும்பல் தங்கள் கொடுமையை அரங்கேற்றிக்கொண்டே உள்ளனர். அவர்களின் கொட்டத்தை போலீசார் அடக்குவார்களா?
First published: September 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading